TN Government Bus: இரவு 10 மணிக்கு மேல் வரும் பயணிகளுக்கு குஷியான செய்தி! போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!
Tamilnadu Transport Department: திண்டுக்கல் மண்டலத்தில் இரவு நேர பேருந்து பயணங்களில் பயணிகள் கோரும் இடங்களில் பேருந்துகளை நிறுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் வசதிக்காகவும், புகார்களைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Government Bus
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர திண்டுக்கல், தேனியில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Passengers
பெரும்பாலான பொதுமக்கள் இரவு பயணத்தையே விரும்புவதால் அதிக அளவில் சொந்த ஊர் திரும்புகின்றனர். அப்படி வருபவர்கள் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் இரவில் பேருந்துகளில் பயணிக்கும் போது ஒருசில ஊர்களில் இரவு நேரத்தில் நிற்க சொன்னாலும் ஓட்டுநர்களோ அல்லது நடத்துனர்ளோ நிறுத்துவதில்லை. இதனால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகிகளிடம் புகார் அளித்திருந்தார்கள்.
Transport Department
இந்நிலையில், இது சம்பந்தமாகக் தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் நகரப் பேருந்து வசதி இல்லாத நேரமான இரவு நேரங்களில் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கோரும்பட்சத்தில் இறக்க வேண்டிய நிறுத்தத்தின் பாதுகாப்பினை அறிந்து, அதற்கேற்ப அவர்களை இறக்கிவிட்டுச் செல்லுமாறு இதுபோன்ற புகார்கள் எழாவண்ணம் பணிபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Government Bus
எனவே திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் புகார் வராவண்ணம் பணிபுரிய இதில் விளை மேலாளர்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Government Bus Driver And Conductor
மேலும் பயணிகளிடமிருந்து புகார் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றறிக்கையை அனைத்து ஓட்டுநர்/நடத்துநர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டியும், தகவல் நோட்டில் கையொப்பம் பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.