MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருவண்ணாமலை மலை மீது பக்தர்கள் ஏற அனுமதி இல்லை.! தமிழக அரசு அதிரடி உத்தரவு

திருவண்ணாமலை மலை மீது பக்தர்கள் ஏற அனுமதி இல்லை.! தமிழக அரசு அதிரடி உத்தரவு

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், சமீபத்திய நிலச்சரிவு மற்றும் பாறைகள் உறுதியற்ற நிலையில் இருப்பதால், பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 11 2024, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
tiruvannamalai

tiruvannamalai

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

திருவண்ணாமலையில் தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.  அண்ணாமலையார் கோவிலில்  உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவானது  வருகிற  13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலையில் பரணி தீபமும், மாலையில்  2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைபுரியவுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டியது.

24
tiruvannamalai landslide

tiruvannamalai landslide

நிலச்சரிவு- 7 பேர் பலி

இதனால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெரிய அளவிலான பாறைகள் வீடுகள் மீது சரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் மண்ணில் புதைந்தனர். பல கட்ட போராட்டத்திற்கு பிறகு இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் திருவண்ணாமலை மீதுள்ள பாறைகள் மற்றும் மண்கள் உறுதியாக இல்லாத நிலையில் இருப்பதாக வீடியோ மூலம் தகவல்கள் பரவியது. இதனையடுத்து மலையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை அளித்தனர்.

34
tiruvannamalai landslide

tiruvannamalai landslide

திருவண்ணாமலையில் நிபுணர்கள் ஆய்வு

இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்ச்சர் கூறுகையில்,  தீப திருவிழாவின் போது மலை மீது மக்கள் அனுமதிப்பது குறித்து  நிபுணர் சரவண பெருமாள்  ராஜா தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார். அதன் திருவண்ணாமலை மலை மீது அதிகமானோர் ஏறக்கூடாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

எனவே கார்த்திகை தீப திருவிழாவின் போது பக்தர்கள் மலை மீது ஏற அனுமதியில்லையென தெரிவித்தார். பக்தர்கள் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிக்கும் என கூறினார். 

44
tiruvannamalai

tiruvannamalai

தேவைப்படும் மனித சக்தி மட்டுமே மலை மீது அனுமதி

அதே நேரத்தில்  தீப திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும்  350 கிலோ கொப்பரை, 450 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல எவ்வளவு மனித சக்தி தேவைப்படுமோ அவ்வளவு மனித சக்தி மட்டுமே மலை மீது அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
சேகர்பாபு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved