பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் தகவல்.! பதிவுத்துறையின் புதிய அறிவிப்பால் திகைக்கும் மக்கள்
நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் சொத்துக்களை பதிவு செய்ய அனுமதிக்கும் புதிய உத்தரவை பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. இது மோசடி பத்திரங்கள் மூலம் நிலம் வாங்குபவர்களை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்
தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்தால் எப்போது வீணாகாது என கூறுவார்கள் அதற்கு ஏற்றார் போல் தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் தங்கத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகம். அந்த வகையில் ஏராளமான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்களது சேமிப்பாக தங்கத்தை வாங்கி மக்கள் குவித்து வருகிறார்கள். இதன் காரணமாகவே தங்கத்தின் மீதான விலையும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இருந்த போதும் தங்களது வாரிசுகளுக்கு சேமிப்பு பொருளாக தங்கம் வாங்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் என்றால் நிலத்தின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு சதுர அடி நிலம் கூட வாங்க முடியாத நிலை உருவாகிவிட்டது. சென்னையின் முக்கிய பகுதியில் ஒரு சதுர அடி 10ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
உயரும் நிலத்தின் மதிப்பு
இதனால் மக்கள் சென்னைக்கு வெளியே நிலங்களில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மாதாவரம் போன்ற பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. ஒரு சதுர அடியின் மதிப்பு 3ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. இந்த நிலையில் வாழ்நாளில் சொந்த நிலத்தில் வாழ்ந்து விட வேண்டும். அதில் சொந்தமாக வீடு கட்டிட வேண்டும் என நினைக்கும் மக்களுக்கு பத்திர பதிவுத்துறை அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்தாண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில், குடும்பத்தில் உள்ள பெற்றோர் மற்றும் உறுவினர்களின் செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 10,000 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கான முத்திரைத்தாள் கட்டணமும் 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல தங்களது நிலத்திற்கு மற்றவர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் பவர் ஆப் அட்டார்னி பதிவு கட்டணமும் அதிகரிக்கப்பட்டது.
ஷாக் தகவலை வெளியிட்ட பதிவுத்துறை
அதன் படி ஏற்கனவே இருந்ததை விட ஒரு சதவிகிதம் உயர்த்தப்பட்டது. தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பத்திர பதிவு செய்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையும் உயர்ந்தது. இந்த நிலையில் மற்றொரு ஷாக் தகவலை பத்திர பதிவு துறை வெளியிட்டுள்ளது.
இதன் படி நீதிமன்றத்தில் சொத்து தொடர்பாக வழக்கு விசாரணையில் இருந்தாலும் அந்த சொத்தை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் போலியான இடங்கள், போர்ஜரி இடங்களை வாங்கும் நிலை உருவாகும், இதன் பின்னர் நிலத்தை வாங்குபவர்கள் தேவையில்லாத சிரமத்தை அடையும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பத்திர பதிவு
பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீதிமன்றத்தில் தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு மட்டும் நிலுவையில் இருந்தால் சொத்து விற்பனையை நிறுத்தக்கூடாது சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என உத்தரவு வெளியாகியுள்ளது. இதற்கு என்ன காரணம் என விசாரிக்கும் போது பத்திர பதிவு செய்ய வரும் சொத்துக்களை நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பதை காரணம் காட்டி பத்திரங்களை திருப்பி அனுப்பவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவின் காரணமாக நிலம் வாங்குபவர்களும், நிலம் வாங்குபவர்களுக்கு கடன் கொடுப்பவர்களும் சிரமம் அடையும் நிலை உருவாகியுள்ளது.
Apartment
சாமானியர்கள் பாதிப்பு
குறிப்பாக ஒருவர் நிலம் வாங்கும் போது அந்த நிலத்தின் ஒரிஜனல் பத்திரம், இசி, மற்றும் வில்லங்க சான்று போன்றவற்றை பார்ப்பதோடு அந்த நிலத்தின் மீது ஏதேனும் வழக்கு உள்ளதா என ஆராய்வார்கள். இதனையடுத்தே நிலத்தை பதிவு செய்ய முன்வருவார்கள்.தற்போது வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திர பதிவு செய்யலாம் என்ற உத்தரவால் சாமானிய மக்களும் கடன் கொடுக்கும் வங்கிகளும் பாதிப்படைய வேண்டிய நிலை வரும்.
குறிப்பாக தற்போது அந்த நிலத்தை விற்பனை செய்ய தடை இல்லாத போது நிலம் வாங்கப்படுகிறது. அந்த நிலம் சாமானியர் பத்திர பதிவு செய்யப்பட்ட பின்னர் நிலத்திற்கு தடை விதிக்கப்பட்டால் அந்த சாமானியரும். அந்த நிலத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளும் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டிய நிலை உருவாகும்.
land registration
போலி பத்திரம் பதிவு
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்கள் கூறும்போது, பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் சொத்து வாங்கும் மக்களுக்கு எந்த வித தடையும் ஏற்படாத வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பத்திரபதிவு துறை சரியாக ஆராயமல் ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் மூலம் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை உரிமையாளருக்கு தெரியாமல் மோசடி நபர் விற்பனை செய்ய முற்படுகிறார். இதனை அறிந்த நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.
மறுபரிசீலனை செய்திடுக
ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் மட்டுமே உள்ள நிலையில் எந்த வித தடை உத்தரவும் பிறப்பிக்காத காரணத்தால் அந்த மோசடி நபர் எளிதில் அந்த நிலத்தை சாமானிய மக்களின் தலையில் கட்டிவிட்டு தப்பித்து சென்று விட முடியும். இதனால் போர்ஜரி நிலத்தை வாங்கிய நபரும், வங்கிகளும் தான் பாதிக்கப்படும். எனவே இந்த புதிய திட்டத்தை நன்கு ஆலோசித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.