- Home
- Tamil Nadu News
- கமலின் சங்கை அறுப்பேன்! கொ** ல மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்! கோர்ட் அதிரடி சரவெடி!
கமலின் சங்கை அறுப்பேன்! கொ** ல மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்! கோர்ட் அதிரடி சரவெடி!
சனாதனம் குறித்து பேசியதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் அகரம் பவுண்டேஷன் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் ஏழை எளிய மக்களை படிக்க வைத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை 15வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது, சனாதனம் குறித்து பேசிய கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரை சங்கை அறுத்து விடுவேன் என துணை நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மவுரியா உள்ளிட்டோர் ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி ரவிச்சந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பால்கனகராஜ் ஆஜராகி எந்த வித உள்நோக்கத்தோடும் அவ்வாறு பேசவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
காவல்துறை தரப்பில், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, துணை நடிகர் டி.ரவிசந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.