ஃபெஞ்சல் புயல்! ரூ. 2000 கோடி கேட்ட முதல்வர் ஸ்டாலின்! மத்திய அரசு கொடுத்தது எவ்வளவு தெரியுமா?
Central Government: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை அடுத்து, மத்திய அரசு நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
Cyclone Fengal
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது.
Villupuram Heavy Rain
பல்வேறு மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றதை அடுத்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், பாலங்கள் கடும் சேதமடைந்துள்ளன. பல கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tiruvannamalai Landslide
திருவண்ணாமலையில், மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படிங்க: இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?
CM Stalin
அதில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, புயல் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் தமிழகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
Central Government
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவும் விதமாக மாநில பெயரிட நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக 944.80 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தர வேண்டிய தொகையில் ரூ.944 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவின் ஆய்வுக்கு பிறகு தேசிய பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் நிதி ஒதுதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.