- Home
- Tamil Nadu News
- பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் திடீர் திருப்பம்! வேன் ஓட்டுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
கடலூரில் இன்று காலை பள்ளி வேன் ரயிலில் மோதியதில், வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேன் ஓட்டுநர் கேட் திறந்திருந்ததாகவும், ரயில் ஹாரன் அடிக்கவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. இதில், பள்ளி வேன் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

இந்நிலையில் வேன் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வேன் ஓட்டுநர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். அதாவது நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது. நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை. கேட்டை மூட வேண்டாம் என நான் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கல. கேட் கீப்பரும் அந்த இடத்தில் இல்லை என கூறினார்.