- Home
- Tamil Nadu News
- சென்னையை குளிர்வித்த மழை! அடுத்த 3 மணிநேரத்தில் எங்கெல்லாம் மழை ஊத்தப்போகுது தெரியுமா?
சென்னையை குளிர்வித்த மழை! அடுத்த 3 மணிநேரத்தில் எங்கெல்லாம் மழை ஊத்தப்போகுது தெரியுமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 8 மாவட்டங்களில் இன்று காலை வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
தமிழகம் மட்டுமின்றி தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்டவே பொதுமக்கள் அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றும் பலத்த மழை பெய்தது. அதாவது போரூர், ராமாபுரம், மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், கோயம்பேடு, அண்ணா நகர், முகப்பேர், அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
அதேபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பொன்னேரி, ராயபுரம், மணலி, எண்ணூர், கொடுங்கையூர், புரசைவாக்கம், பூந்தமல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் திருவள்ளூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.