- Home
- Tamil Nadu News
- கொத்து கொத்தாக வரும் அக்டோபர் மாத விடுமுறை.! இத்தனை நாட்களா.? துள்ளி குதிக்கும் மாணவர்கள்
கொத்து கொத்தாக வரும் அக்டோபர் மாத விடுமுறை.! இத்தனை நாட்களா.? துள்ளி குதிக்கும் மாணவர்கள்
Continuous holidays : அக்டோபர் மாதம் பள்ளி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறைகளும் வரவுள்ளன. இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி மக்கள் வெளியூர் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விடுமுறை என்றோலே கொண்டாட்டம் தான். இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஓய்வு தான் சற்று மனதளவில் நிம்மதியை கொடுக்கும். எனவே எப்போது விடுமுறை கிடைக்கும் பள்ளி மாணவர்கள் முதல் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வரை காத்திருப்பார்கள்.
அதன் படி பள்ளி மாணவர்களுக்கு தற்போது காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர்களுக்கும் அக்டோபர் மாதம் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.
அக்டோபர் மாதத்தில் 1ஆம் தேதி புதன் கிழமை சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2ஆம் தேதி வியாழக்கிழமை விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களாக உள்ளது. இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமறை எடுத்தால் அடுத்தாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். எனவே இந்த விடுமுறை நாட்களையொட்டி வெளியூர் பயணம் செய்ய திட்டமிடலாம்.
இதனையடுத்து தீபாவளி பண்டிகையும் அக்டோபர் மாதத்தில் தான் வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட் கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே ஏற்கனவே அக்டோபர் 18 மற்றும் 19ஆம் தேதியான சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக உள்ளது.
அடுத்ததாக அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனிடையே தமிழக அரசு வருகிற அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அன்றைய தினமும் விடுமுறை கிடைப்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையானது கிடைக்கும்.
எனவே அக்டோபர் மாதம் விடுமுறை நாட்களை கொட்டிக்கொடுக்கும் மாதமாகவே அமைந்துள்ளது. அதிலும் அரசு ஊழியர்களுக்கு கொத்தாக விடுமுறைகள் வரவுள்ளதால் சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும், திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.