- Home
- Tamil Nadu News
- காத்து வாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள் டோட்டல் எஸ்கேப்.. அப்போ அதானா?
காத்து வாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள் டோட்டல் எஸ்கேப்.. அப்போ அதானா?
தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் முடங்கி கிடக்கிறது. படத்தை முடக்கி வைத்து மத்திய பாஜக அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகிய எம்.பி.க்கள் அழுத்தமாக குரல் கொடுத்தனர்.

ஊசலாடும் காங்கிரஸ், திமுக கூட்டணி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா? இல்லை தவெக பக்கம் சாயுமா? என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஜனவரி 20) நடந்தது.
காங்கிரஸ் கூட்டத்தில் 30 பேர் ஆப்சென்ட்
இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், 60 பேர் மட்டுமே பங்கேற்றனர். 30 பேர் கூட்டத்தில் பங்கேற்காமல் எஸ்கேப் ஆனார்கள்.
விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள்
காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த், முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய முக்கியமானவர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் முடங்கி கிடக்கிறது. ப
டத்தை முடக்கி வைத்து மத்திய பாஜக அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகிய எம்.பி.க்கள் அழுத்தமாக குரல் கொடுத்தனர்.
திமுகவை கலங்கடிக்கும் மாணிக்கம் தாகூர்
அதுவும் மாணிக்கம் தாகூர் 'ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு' என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக ஐடி விங்கை கடந்த சில நாட்களாக திணறடித்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏற்கெனவே ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவுடன் டெல்லியில் நடந்த மீட்டிங்கில் செல்வபெருந்தகை தரப்பு திமுக கூட்டணி வேண்டும் எனவும் இளம் தலைவர்கள் தவெகவுடன் சேரலாம் எனவும் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.

