கோவை தனியார் காற்றாலையில் தீடீர் தீ விபத்து
கோவை செலக்கரிச்சல் பகுதியில் தனியார் காற்றாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமளவெனப் பரவி இறக்கைகள் முழுவதும் சூழ்ந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கோவை காற்றாலை தீ விபத்து
கோவை மாவட்டம் செலக்கரிச்சல் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் காற்றாலை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காற்றின் வேகத்தால் தீயானது காற்றாலையின் இறக்கைகளில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
தனியார் காற்றாலையில் தீ
செலக்கரிச்சல் பகுதியில் உள்ள தனியார் காற்றாலை ஒன்றில் இன்று (திங்கள்கிழமை) மதியம் திடீரென இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பற்றி எரிய ஆரம்பித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீயானது வேகமாகப் பரவி காற்றாலையின் மிகப்பெரிய இறக்கைகள் முழுவதையும் சூழ்ந்துகொண்டது.
இந்த எதிர்பாராத விபத்தைக் கண்ட அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பலர் தங்கள் செல்போன்களில் இந்தச் சம்பவத்தைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
தீயணைப்பு வீரர்களுக்கு சவால்
விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் பெரும் முயற்சிக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் திடீரென காற்றாலை தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.