- Home
- Tamil Nadu News
- Coimbatore Power Cut: தமிழகத்தில் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
Coimbatore Power Cut: தமிழகத்தில் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
Power Shutdown: தேர்தல் மற்றும் பொதுத்தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்குகின்றன. இதன் விளைவாக, மே 18ம் தேதி திங்கள் கிழமை தமிழகத்தின் முக்கிய இடங்களிலும் மின்தடை.

தமிழ்நாடு மின்சார வாரியம்
நாம் தாத்தா பாட்டி காலத்தில் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மின்சாரம் இல்லாம் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரியத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கும் அளவுக்கு மின் தேவை அதிகரித்துள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
நாளை மின்தடை இடங்கள் அறிவிப்பு
இதனிடையே 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக மின்தடையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் மின்தடை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மே 18ம் தேதியான திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம்
ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, நீர்வீழ்ச்சிகள், குரங்குமுடி, தலைமுடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைஃபாரெஸ்ட், சோலையார்நகர், மூடிஸ், சின்கோனா, பன்னிமடு, மணப்பள்ளி, காடம்பாறை, பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம்.
பெரியநாயக்கன்பாளையம்
24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அத்திக்கடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர், மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

