- Home
- Tamil Nadu News
- கட்டம் போட்ட சட்டை, கைலி: மருத்துவமனையில் இருந்தபடியே பொதுமக்களிடம் குறைகளை கேட்ட முதல்வர் ஸ்டாலின்
கட்டம் போட்ட சட்டை, கைலி: மருத்துவமனையில் இருந்தபடியே பொதுமக்களிடம் குறைகளை கேட்ட முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்தபடி பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.

உங்களுடன் ஸ்டாலின்
தமிழகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உட்பட அரசிடம் இருந்து பெறப்படும் அனைத்து சான்றிதழ்களுக்கும் தீர்வு காணப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் ஸ்டாலின்
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான தலைசுற்றல் காரணமாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் இருந்தபடி ஆட்சியர்களுடன் ஆய்வு
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மருத்துவமனையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களிடம் குறைகளை கேட்ட ஸ்டாலின்
மேலும் இந்த ஆய்வின் போது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பங்கேற்ற பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது தலைமைச் செயலாளர் முருகானந்தம் உட்பட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.