MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொத்து கொத்தாக ஸ்டாலின் வெளியிட்ட 102 அறிவிப்புகள்.! குஷியில் மக்கள்

கொத்து கொத்தாக ஸ்டாலின் வெளியிட்ட 102 அறிவிப்புகள்.! குஷியில் மக்கள்

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 102 அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

4 Min read
Ajmal Khan
Published : Apr 29 2025, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

Tamil Nadu police announcements : தமிழக சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 102 அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்த வகையில், 

ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களை 100-லிருந்து 150 ஆக உயர்த்துதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்களின் எண்ணிக்கை 100-லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூபாய் 1.08 கோடி ஆகும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை 3000-லிருந்து 4000 ஆக உயர்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப்படியையும் உயர்த்தி வழங்குதல். ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் 3000-லிருந்து 4000 ஆக உயர்த்தப்படுவதுடன், மாதாந்திர பதக்கப் படி ரூ.400-லிருந்து ரூ.500 ஆக  உயர்த்தப்படும்.  இதற்கான தொடர் செலவினம் ரூபாய் 4.80 கோடி ஆகும்.

28
tamilnadu police

tamilnadu police

காவல்துறைக்கு புதிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சிறப்புக் காவல் அணிகள் மற்றும் அனைத்து ஆயுதப்படை குடியிருப்புகளில் காவல் மன்றங்கள்  (Police Clubs) அமைத்தல்

மாநிலத்திலுள்ள 15 தமிழ்நாடு சிறப்புக் காவல் அணிகள்  மற்றும் 47 மாவட்டம் / நகரங்களில் உள்ள காவல் துறையினரின் குடும்ப நலனுக்காக ஆயுதப்படை குடியிருப்புகளில் ரூபாய் 92 இலட்சம் தொடர் செலவினத்தில் காவல் மன்றங்கள் (Police Clubs) உருவாக்கப்படும்.

காவலர் பணிக்கு ஆட்களைத்  தேர்வு செய்யும் போது, பெண் காவலர்களை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் முதலில் பணியமர்த்தும் வகையில் ஒற்றை நுழைவு  முறையை மீண்டும் கொண்டு வருதல்

புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் புலனாய்விற்காக பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/காவல் படைத் தலைவர் அவர்களுக்கு வழங்குதல். 

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களான பெண் காவல் பணியாளர்களுக்கு சுலபமான, நிர்ணயம் செய்யப்பட்ட பணி நேரம் வழங்குதல் 

செப்டம்பர் 6 காவலர் நாள்! அதுமட்டுமல்ல! முதல்வர் ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்புகள் இதோ!
 

38
Chief Minister Stalin

Chief Minister Stalin

காவலர்களுக்கு பணி உயர்வு

பேறுகாலத்தில் இருக்கும் பெண் காவலர்கள், காக்கி நிற சேலை  அணியும் போது, தோள்பட்டையில் அவர்களின் பதவியைக் குறிக்கும் பட்டையை அணிய அனுமதி வழங்குதல்

உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி (Assured Career Progression),  காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் (Up gradation) தற்போது  10 + 5 + 10 ஆண்டுகள் என்று உள்ளதை மாற்றி  10 + 3 + 10 என்று நிர்ணயம் செய்து அமல்படுத்துதல்

கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூரில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள கீழடியில் புதிதாக காவல் நிலையம் ரூ.2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி உட்கோட்டத்தில் உள்ள மேலச்செவலில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 4.88 கோடி செலவில் உருவாக்கப்படும்.

48
Tamilnadu Police

Tamilnadu Police

புதிய காவல் நிலையங்கள்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் உட்கோட்டத்தில் உள்ள பொங்கலூரில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 2.83 கோடி செலவில் உருவாக்கப்படும்.

மதுரை மாநகரக் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மாடக்குளத்தில் புதிதாக காவல் நிலையம் ரூபாய் 6.57 கோடி செலவில் உருவாக்கப்படும்.

சென்னை பெருநகரம், திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், புறக்காவல் நிலையம் ரூபாய் 7.50 இலட்சம் செலவில் அமைக்கப்படும். 

சென்னை பெருநகரம், பெரம்பூர், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைத்தல் புறக்காவல் நிலையம் ரூபாய் 7.50 இலட்சம் செலவில் அமைக்கப்படும். 

சென்னை பெருநகர காவல், அரும்பாக்கம் சரகத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூபாய் 2.68 கோடி செலவில் அமைக்கப்படும்.

காலனி என்ற சொல் நீக்கம்! மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
 

58
Chief Minister Stalin

Chief Minister Stalin

280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள்

சென்னை பெருநகர காவலின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஒன்று ரூபாய் 8 இலட்சம் செலவில்  உருவாக்கப்படும்.

 சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப் பிரிவின் இணையவழி குற்றப் பிரிவில், தேவையான பணியிடங்களுடன் சமூக ஊடக நுண்ணறிவுப் பிரிவு ஒன்று புதிதாக ரூபாய் 63 இலட்சம் செலவில் உருவாக்கப்படும். 

குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை பெருநகர பகுதிகளில், ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்காக இரண்டு புதிய காவல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் உருவாக்குதல்

280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள் ஆய்வாளர் 

ஆவடி மாநகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு மற்றும் துணை ஆணையாளர் அலுவலகங்களுக்கென ஒருங்கிணைந்த புதிய காவல் நிலையக் கட்டடம் கட்டுதல்
 

68

காவலர்களுக்கு புதிய குடியிருப்புகள்

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் 90 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள் மற்றும் தருமபுரியில் 135 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள்  கட்டுதல்

ஆறு காவல் உதவி ஆணையாளர், எட்டு காவல் ஆய்வாளர், 22 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 255 காவல் ஆளிநர்களுக்கென மொத்தம் 321 காவல் குடியிருப்புகள் கட்டுதல்

காவலர் தங்குமிடம் வசதி இல்லாத அல்லது குறைவாக உள்ள 20 மாவட்ட/ மாநகரங்களில் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்காக 50 படுக்கை வசதிகள் கொண்ட காவலர் தங்குமிடங்கள் ரூபாய் 30 கோடி செலவில் கட்டப்படும்.

சென்னை செம்பியத்தில் அமைந்துள்ள அதிஉயரலை சமிக்ஞை  நிலையமானது, தற்போது பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருவதால், அக்கட்டடத்தை இடித்து விட்டு, அதற்கென ஒரு புதிய கட்டடம் ரூபாய் 76 இலட்சம் செலவில் கட்டப்படும்.

சார்நிலை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகளுக்காக 350 நான்கு சக்கர வாகனங்கள் (ஈப்புகள்) வாங்குதல்     

78
tamilnadu police

tamilnadu police

காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

சென்னை மாநகரக் காவல்துறையை தவிர்த்து மற்ற மாநகரங்களுக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் (Pink Patrol Vehicles) வாங்குதல்.  

தமிழ்நாடு காவல் துறையில் இணையவழி குற்றப் பிரிவிற்கு நவீன திரைமறைவு இணையதள (Dark Web)  கண்காணிப்பு அமைப்பு நிறுவுதல்

டிஜிட்டல் உயரலை தொடர்பு சாதனத் திட்டம் (DMR) மேலும் நான்கு மாவட்டங்கள் மற்றும் இரண்டு மாநகரங்களுக்கு விரிவுபடுத்துதல்
 
சென்னை பெருநகர காவல் பயன்பாட்டிற்கென வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் கருவிகள் வாங்குதல்

நுண்ணறிவுப் பிரிவு / சிறப்பு செயலாக்கத்தில் சிறப்பான பணிக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்குதல் நுண்ணறிவுப் பிரிவு / சிறப்பு செயலாக்கத்தில் சிறப்பான பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் ரூபாய் 1.20 கோடி செலவில் வழங்கப்படும்.

88
tamilnadu police

tamilnadu police

தீயணைப்பு துறை திட்டங்கள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பல்வேறு இடங்களில்  கட்டப்பட்ட குடியிருப்புகளில், காவல் ஆளிநர்கள் குடியிருக்க வகை செய்தல்  

காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியவற்றில் 3,363 காவலர்கள் தேர்வு செய்தல்

கோயம்புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் ரூபாய் 27.22 கோடி செலவில் 72 பணியாளர் குடியிருப்புகள் இரண்டு கட்டங்களாகக் கட்டப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் புதிய மண்டலம் உருவாக்குதல்

தீத்தொண்டு நாளில் வழங்கப்படும் சிறப்புப் பணி பதக்கம் மற்றும் அண்ணா பிறந்த நாளில் வழங்கப்படும் அண்ணா பதக்கம் ஆகியவற்றின் எண்ணிக்கையை உயர்த்துதல்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்றம்
காவல்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved