- Home
- Tamil Nadu News
- பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
தமிழகத்தில் பீகார் ஊழியர்கள் தாக்கப்படுவதாக சொன்ன கருத்தை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பேச முடியுமா என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

எம்பி இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின்
திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் இருந்து தருமபுரிக்கு காரில் சென்றார். தம்பதியருக்கு தமது கரங்களால் தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
SIR என்ற பெயரில் தீய செயலை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் தீய செயலை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனை தடுப்பதற்கான முயற்சியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
முதல் நபராக எதிர்த்த தமிழகம்
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் உண்யைான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகும். இதனை தான் பீகார் மாநிலத்தில் மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் இது மேற்கொள்ளப்பட்ட போது தமிழகத்தில் இருந்து தான் முதல் நபராக குரல் எழுப்பப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக வழகு தொடுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கவில்லை.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறார். பாஜக அரசால் தேர்தல் ஆணையத்தைக் கண்டு பழனிசாமி பயப்படுகிறார்.
பீகாரில் பேசியதை தமிழகத்தில் பேசுங்கள் பார்ப்போம்..
தமிழகத்தில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி வாக்கு அரசியலுக்காக நாடகத்தை நடத்தி உள்ளார். பிரதமர் மோடி பீகாரில் பேசிய அதே கருத்தைத் தமிழகத்தில் பேச முடியுமா..? மோடி இப்படி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநில தொழிலாளர்கள், தமிழகம் தங்களுக்கு வாய்ப்பளித்தள்ளதாக தெரிவிக்கின்றனர். நம் மீது எத்தனை அவதூறுகள் பரப்பினாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.