- Home
- Tamil Nadu News
- கலக்கும் தமிழ்நாடு.! மின்னணு பொருட்கள் உற்பத்தியில் அசத்தல்- டிஆர்பி ராஜா பெருமிதம்
கலக்கும் தமிழ்நாடு.! மின்னணு பொருட்கள் உற்பத்தியில் அசத்தல்- டிஆர்பி ராஜா பெருமிதம்
தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இத்திட்டத்தின் மூலம் 30 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா, தமிழ்நாடு மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும்,
தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி
மின்னணு துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 14.6 பில்லியன் அமெரிக்கா டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்றே கால் லட்சம் கோடி அளவிற்கு மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். 100 பில்லியன் டாலர் இலக்கை அடைய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், ஃபோன் கேமரா, டிஸ்ப்ளே, எஸ் எம் டி கம்பொணன்ஸ், ஃபிட்னஸ் ரிங் பேண்ட் ஆகிய தயாரிப்புகள் இதில் முக்கிய இடம் பெறும் என கூறினார்.
60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
இதன் மூலமாக 30 ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புப் கிடைக்கும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 41.23 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும், அனைத்து மின்னணு பொருட்களுக்கும் தயாரிக்க தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கபட உள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருளின் தரம்
தமிழ்நாட்டில் செய்யப்படும் ஒரு பொருளின் தரம் வேறு எங்கும் தயாரிக்க முடியாது எனவும், அதற்க்கு தேவையான உட்கட்டமைப்பு, மனிதவளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார். ஃபோர்ட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட உள்ளது அதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறதாகவும் கூறினார்.