அடி தூள்.! தமிழகத்தில் சாம்சங் மேலும் 1000 கோடி முதலீடு- வெளியான அசத்தல் தகவல்
சாம்சங் நிறுவனம் ரூ.1000 கோடி கூடுதல் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Samsung invest another Rs 1000 crore : தமிழக அரசு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின், லண்டன், ஜப்பான், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார்கள்,
மேலும் தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாகவும் பல ஆயிரம் கோடிகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரபல நிறுவனமான சாம்சங் சென்னை ஶ்ரீபெரும்புத்தூரில் ஏற்கனவே பல ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலையை இயக்கி வருகிறது.
Samsung investment
ஶ்ரீபெரும்புத்தூரில் சாம்சங் ஆலை
இந்த தொழிற்சாலையில் குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் சாம்சங்கின் FY23க்கான $12 பில்லியன் விற்பனையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே இந்த தொழிற்சாலை வேறு மாநிலங்களுக்கு இடம்பெயறசாம்சஸ் திட்டமிட்டது. ஆனால் தமிழக அரசு தொழிலாளர்களுக்கும்- சாம்சங் நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
தொழிலாளர்கள் பக்கம் அரசாங்கம்
இதனை தொடர்ந்து தொழிற்சாலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாம்சங் நிறுவனம் தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக அசத்தலான தகவலை தொழிற்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் தொழிற்துறை மானிய கோரிக்கையில் பேசிய டிஆர்பி ராஜா, சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறம் பட கையாண்டார். தொழிலாளர்கள் பக்கம் என்றைக்குமே அரசு நிற்கும் என்பதற்கு இதுவே சாட்சி என தெரிவித்தார்.
Samsung Rs 1000 crore in Tamil Nadu
தமிழகத்தில் மேலும் 1000 கோடி முதலீடு
அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றது போல் இந்த ஆட்சியில் எந்த நிறுவனமும் தமிழகத்தை விட்டு செல்லாது என கூறினார். தற்போது உள்ள தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து சாம்சங் நிறுவனம் மேலும் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்பதை நேற்று உறுதி செய்துள்ளதாக கூறினார். இதன் மூலம் கூடுதலாக 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
Samsung invest another Rs 1000 crore
அமெரிக்காவின் வரி விதிப்பு
இதனிடையே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து மற்ற நாடுகளில் மீது வரி விதிப்பை அதிகரித்துள்ளது. அந்த வகையில் அமெரிக்க நிர்வாகம் வியட்நாமில் இறக்குமதி 46% வரியை விதித்தது. இந்தியாவிற்கு குறைந்த அளவில் வரி விதிக்கப்படுகிறது. இதனையடுத்து வியட்நாமில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.