சென்னையில் இரவில் கொட்டித்தீர்த்த கன மழை.! இன்று எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.? வானிலை மையம் அலர்ட்
சென்னையில் காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் இடி, மின்னலோடு பலத்த மழை பெய்தது. புறநகர் பகுதியில் பெய்த கன மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் மரங்களும் கீழே விழுந்தது.
RAIN
சென்னையில் கொட்டித்தீர்த்த கன மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இரவு நேரத்தில் சூறைக்காற்றோடு கன மழை பெய்தது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், ராமாவரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பூந்தமல்லியில் 10 செ.மீ அளவிற்கும், சோழிங்கநல்லூர் 8 செ.மீ, செம்பரம்பாக்கம் 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
chennai rain
21ஆம் தேதி வரை மழை நீடிக்கும்
இதனிடையே மழை நிலவரம் தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 21.06.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rain Update
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
17.06.2024 முதல் 21.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2"-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
CHENNAI RAIN
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27"-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.