- Home
- Tamil Nadu News
- தென்மாவட்ட மக்கள் கவனத்துக்கு..! மும்பை, சென்னை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..! முழு விவரம்!
தென்மாவட்ட மக்கள் கவனத்துக்கு..! மும்பை, சென்னை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..! முழு விவரம்!
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணாமாக தென்மாவட்ட ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Chennai Mumbai Express Train Changes
மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் சென்னை, மும்பை, ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு சந்திப்பில் இருந்து பகல் 2 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16845) ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30, 2025 வரை (செப்டம்பர் 2, 9, 16, 23, மற்றும் 30 ஆகிய தேதிகளில் தவிர) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
செங்கோட்டை –-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
மறுமார்க்கமாக செங்கோட்டை – ஈரோடு சந்திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16846) செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை (செப்டம்பர் 3, 10, 17, மற்றும் 24 ஆகிய தேதிகளில் தவிர) திண்டுக்கல்லில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும்.
இதேபோல் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்: 16848) செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை (செப்டம்பர் 3, 10, 17, மற்றும் 24 ஆகிய தேதிகளில் தவிர) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, திண்டுக்கல் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ்
நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் – மும்பை CSMT எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16352) செப்டம்பர் 4, 7, 11, 14, 18, 21, 25, மற்றும் 28 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நிற்காது. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி – ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸும் (வ.எண்: 12666) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ்
குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்:16128) செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகள் தவிர) மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும்.
இந்த ரயில் மதுரை, சோழவந்தான்,கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. அதற்கு பதிலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி – ஹைதராபாத்
கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் (வ.எண்: 07229) செப்டம்பர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக செல்லும். மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நிற்காது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.