- Home
- Tamil Nadu News
- ஐடி ஊழியர்கள் ஆவலோடு காத்திருந்த செய்தி.! மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு
ஐடி ஊழியர்கள் ஆவலோடு காத்திருந்த செய்தி.! மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2 வழித்தடம் 4-ல் போரூர் சந்திப்பு முதல் பூந்தமல்லி பணிமனை வரை சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இந்த 10 கி.மீ உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது

சென்னை மெட்ரோ ரயில் சேவை
மெட்ரோ ரயில் திட்டம் சென்னை மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் காலியாக சென்ற நிலையில் தற்போது நிற்க கூட இடம் இல்லாத நிலை நீடிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக சரியான நேரத்தில் ரயில்கள் இயக்கம். குறிப்பிட்ட நேரத்தில் பயண தூரத்தை சென்று சேர்வது என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் மக்கள் பெரிதும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையானது நீட்டிக்கும் பணியானது தொடங்கியுள்ளது.
ஐடி ஊழியர்கள் எதிர்பார்த்த மெட்ரோ ரயில் வழித்தடம்
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்த வழித்தடமான போரூர் வழித்தடம் மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை (upline) நடைபெற்ற வழித்தட சோதனை மற்றும் மெட்ரோ இரயில் ஓட்டத்தை தொடர்ந்து இன்று (06.06.2025), போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் வரை (Downline) சோதனை ஓட்டத்தைத் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
போரூர் டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
இந்த உயர்மட்ட வழித்தடம் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ இரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும்
கூடுதலாக, பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்தின் துணை மின்நிலையத்திற்கு, பூந்தமல்லி பணிமனையில் உள்ள துணை மின்நிலையத்திலிருந்து 33kV மின் விநியோக கேபிள் மூலம் வெற்றிகரமாகத் மின்சாரம் கொண்டு வரப்பட்டு, அது செயல்பாட்டிற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு பாதுகாப்பு வசதி
இதனை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு அ.சித்திக், இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார். படிப்படியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும். இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.