சென்னை-குருவாயூர், செங்கோட்டை ரயில் சேவையில் முக்கிய மாற்றம்; முழு விவரம்!
திருச்சி-திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை-குருவாயூர், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.
Chennai-Guruvayur Express
திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் ரயில் வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக சில ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது சில ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரயில்கள் வேறு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன. இது குறித்த தகவலை விரிவாக காணலாம்.
வழித்தடம் மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்
செங்கோட்டையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் செங்கோட்ட மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 12, 14, 17, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும். மேற்கண்ட நாட்களில் இந்த ரயில் கள்ளிக்குடி திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை செல்லாது. மாற்று வழியில் மானாமதுரை மற்றும் காரைக்குடியில் நிற்கும்.
மறுமார்க்கமாக மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16847) டிசம்பர் 14ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில் மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய இடங்களுக்கு செல்லாது. மானாமதுரை மற்றும் காரைக்குடியில் நிற்கும்.
Train service changed
குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 12ம் தேதி மாலை 6:15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16352) நெல்லை, கோவில்பட்டி. விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வழியாக மும்பை சிஎஸ்டி செல்லும். மதுரை மற்றும் திண்டுக்கல் செல்லாது. மாற்று வழியில் மானாமதுரையில் நிற்கும்.
குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வ.எண்: 16128) டிசம்பர் 11, 13, 16, 27, 30 ஆகிய தேதிகளில் நெல்லை, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக சென்னை செல்லும். இந்த ரயில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறைக்கு செல்லாது. கூடுதலாக மானாமதுரையில் நிற்கும்.
Southern Railway
கன்னியாகுமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ்
கன்னியாகுமரி - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12666) டிசம்பர் 14 மற்றும் 28 தேதிகளில் மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக ஹவுரா செல்லும். மதுரை மற்றும் திண்டுக்கல் செல்லாது.
நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 14 மற்றும் 28ம் தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் (வ.எண்: 16354) நாகர்கோவில் - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் திருச்சி செல்லாமல் திண்டுக்கல் மற்றும் கரூர் வழியாக இயக்கப்படும்.
இதேபோல் கச்சிகுடா - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 13ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக நாகர்கோவில் செல்லும். மானாமதுரையில் கூடுதலாக நிற்கும்.
பக்தர்களுக்கு குட் நியூஸ்; தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்; எந்தெந்த நேரம்
Trains Time Changed
புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்
ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (வ.எண் 16845) டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் (வ.எண்: 16846) செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 28 மற்றும் 31ம் தேதிகளில் செங்கோட்டை-கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் கரூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும்.
Indian Railway
சென்னை-மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர் - மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் (வ.எண் 22671) டிசம்பர் 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் திருச்சி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் (வ.எண் 22672) டிசம்பர் 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திருச்சியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும்.
இதேபோல் மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக 3.30 மணிக்குப் புறப்படும்.
வெள்ளத்தில் மிதக்கும் திருநெல்வேலி; செங்கோட்டை-கேரளா சாலை துண்டிப்பு; சபரிமலை பக்தர்கள் தவிப்பு!