பக்தர்களுக்கு குட் நியூஸ்; தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்; எந்தெந்த நேரம்?
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Tiruvannamalai Temple
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை மகா தீப திருவிழா நடைபெறுகிறது. அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக திருவண்ணாமலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுமார் 15,000க்கும் மேற்பட்ட காவலர்கள் திருவண்ணாமலை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையில் 30 பேர் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, விழுப்புரம், பெங்களூரு, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Tiruvannamalai Festival
இதற்காக திருவண்ணாமலையில் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திருவண்ணாமலை நகரம் முழுவதும் குடிநீர், கழிவுநீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆங்காங்கே உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிகை நடவடிக்கையாக மருத்துவ குழுக்களும் முகாம்களை அமைத்துள்ளன.
24 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!
MEMU Trains
இந்நிலையில் திருவண்ணாமலைக்கு தாம்பரம், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது தாம்பரத்தில் இருந்து டிம்பர் 13ம் தேதி, 14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் சிறப்பு மெமு ரயில் (வண்டி எண் 06115) காலை 10.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
Special Trains to Tiruvannamalai
மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மெமு ரயில் (வண்டி எண்: 06116) நள்ளிரவு 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலை சென்றடையும்,
இதேபோல் விழுப்புரத்தில் இருந்து 13ம் தேதி, 14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் மாலை 4.40 மணிக்கும், இரவு 8 மணிக்கும் சிறப்பு மெமு ரயில் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும், இரவு 6.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மெமு சிறப்பு ரயில்களில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; சென்னைக்கு வெள்ள அபாயம்; எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!