DMK Councilor Suspended: திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்! என்ன காரணம்? வெளியான தகவல்!
DMK Councilor suspended: திமுகவில் இருந்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி மதுரவாயல் வி.ஜி.பி, அமுதா நகர் கூவம் கரையோரம் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் நாகராஜன் என்பவர் எடுத்துச் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: Armstrong: 20 ஆண்டு பகை! காத்திருந்து ஆம்ஸ்ட்ராங்கை பழி தீர்த்த சம்போ செந்தில்! ஒருங்கிணைத்த முக்கிய புள்ளி?
இந்நிலையில் கடந்த 20 நாட்களாக சென்னை மாநகராட்சியின் 144-வது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுடன் சென்று குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என மிரட்டியுள்ளார். அவ்வாறு பணிகளை மேற்கொண்டால் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டுயுள்ளார்.
இதையும் படிங்க: TASMAC Shop: குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டாஸ்மாக் விவகாரத்தில் முக்கிய முடிவு!
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் இருவரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி திமுக கவுன்சிலர் ஸ்டாலின் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: Schools Reopen: பள்ளி மாணவர்களுக்கு முடிவடையும் காலாண்டு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி 144வது வட்டச் செயலாளரும் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் அவர்கள் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.