Armstrong: 20 ஆண்டு பகை! காத்திருந்து ஆம்ஸ்ட்ராங்கை பழி தீர்த்த சம்போ செந்தில்! ஒருங்கிணைத்த முக்கிய புள்ளி?
Armstrong Vs Sambo Senthil: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய 4892 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் ரவுடி சாம்ராஜ்ய பகை காரணமாக இந்த கொலை சதி அரங்கேற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி கொடூரமான வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த கொலை மறைந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
Armstrong
இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் சினிமா மிஞ்சும் அளவிற்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் த்ரில்லிங் இருந்து வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக திமுக வழக்கறிஞர் அருள், அதிமுக நிர்வாகி மலர்கொடி, தமிழக மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலி, அவரது மனைவி பொற்கொடி, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை பிரபல ரவுடியான நாகேந்திரன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: TASMAC Shop: குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டாஸ்மாக் விவகாரத்தில் முக்கிய முடிவு!
மேலும் தலைமறைவாக சம்போ செந்தில் என்ற சம்பவம் செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். 4892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சி தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு வளர்ச்சி அடைந்ததால் அதனை தடுக்கவே கொலையை செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக ரூ.10 லட்சம் செலவிட்டுள்ளனர். குறிப்பாக, ரவுடியிசத்தில் சென்னையை அடுத்து யார் ஆள போகிறார்கள் என்ற விவகாரத்தில் பல ரவுடிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் கூட்டு சேர்ந்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Armstrong
குறிப்பாக கொலை செய்யும் பொறுப்பு பொன்னை பாலுவுக்கும், பணம், நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களை கொடுக்கும் பொறுப்பு சம்போ செந்திலுக்கும், கொலையை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அஸ்வத்தாமனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி ஊழியர்கள் போல் கொலை செய்ய வேண்டும் என்பது பொன்னை பாலுவின் திட்டம் என கூறப்படுகிறது. இதில் முதல் குற்றவாளியாக வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளி சம்பவம் செந்தில், 3வது குற்றவாளி அஸ்வத்தாமன் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: Schools Reopen: பள்ளி மாணவர்களுக்கு முடிவடையும் காலாண்டு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!
இதனிடையே சம்பவம் செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பகை இருந்து வந்தது தெரியவந்துள்ளது. 2002ம் ஆண்டு சம்போ செந்திலின் தந்தை தலைமைச் செயலக காலனி குடியிருப்பு பகுதியில் ஒரு இடத்தை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஆம்ட்ஸ்ராங்கின் ஆதரவாளர்கள் சிலர் அருகில் உள்ள இடத்தையும் சம்போ செந்திலின் தந்தை ஆக்கிரமித்து விட்டதாகவும் அது எங்களுடைய இடம் என வீட்டிற்குள் அமர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
சம்போ செந்திலின் தந்தைக்காக அவரே பஞ்சாயத்து செய்துள்ளார். மேலும் 30 லட்சம் கொடுத்தால் தான் இடத்தை காலி செய்வோம் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தகராறு செய்ததாகவும் இறுதியில் சம்போ செந்தில் 12 லட்சத்தை கொடுத்துள்ளார். அன்று முதலே சம்பவ செந்தில் -ஆம்ஸ்ட்ராங் இடையே பகை இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்து கொலைக்கு தனது சொந்த பணமான 4 லட்சத்தை வழங்கியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
2002ஆம் ஆண்டிற்கு பிறகு வழக்கறிஞராக இருந்த சம்போ செந்தில் தண்டையார்பேட்டையில் கல்வெட்டு ரவி என்ற ரவுடி மீதான வழக்குகளுக்காக ஆஜராகி பிறகு அவருடன் இணைந்தார். பின்னர் சம்போ செந்திலுக்கு ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் காக்கா தோப்பு பாலாஜி , சிடி மணி ஆகியோரின் கூட்டாளிகள் கல்வெட்டு ரவியை தாக்க முற்பட்ட போது அவரைக் காப்பாற்ற களத்தில் இறங்கி முழுநேர ரவுடியாக மாறினார். இதனை அடுத்து கொலை வழக்குகளை சம்போ செந்திலின் பெயர் அடிப்பட பின்னர் ஏ ப்ளஸ் ரவுடி லிஸ்டில் சேர்ந்துள்ளார். நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வரும் சம்போ செந்திலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்