TASMAC Shop: குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டாஸ்மாக் விவகாரத்தில் முக்கிய முடிவு!
TASMAC Shop Close:தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
tasmac
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே எடுத்து நடத்தி வருகிறது. 2016ம் ஆண்டு மொத்தம் 6,828 டாஸ்மாக் கடைகள் இருந்தன. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது மதுவிலக்கு என்ற பொதுமக்களின் கோஷம் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் அதிர வைத்தது. அதன்படி, திமுக தனது தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறி வந்தது. அதேபோல், அதிமுக படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இறுதியாக ஆட்சியைத் தக்கவைத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியின் படி 500 டாஸ்மாக் கடைகளையும், அவரது மறைவுக்கு பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு 500 கடைகளைகள் என மொத்தம் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.
tasmac
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். தேர்தல் வாக்குறுதியின் படி 500 மதுக்கடைகள் மூடப்பட்டது. பின்னர் பொதுமக்கள் எதிர்ப்பு நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இதையும் படிங்க: TASMAC Shop: டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்! இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! குஷியில் குடிமகன்கள்!
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளால் இளைஞர்கள் சீரழிவதாகவும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் அதிகளவில் ஈடுபடுவதால் உடனடியான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறிவருகின்றனர்.
சமீபத்தில் மது ஒழிப்பு மாநாடு நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூடினால், திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் கூறும்போது, தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவதற்காக கடைகளை கண்டறியும் பணி நடைபெறுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 8-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி பங்கேற்கவுள்ளார். இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுப்படுத்ததல், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், தொழில்துறை முதலீடுகள், சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருப்பதால் 500 டாஸ்மாக் கடைகளை முடிவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.