MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளின் தலையில் பேரிடியை இறக்கிய மத்திய அரசு.. நெல்லின் ஈர அளவை உயர்த்த முடியாதாம்

விவசாயிகளின் தலையில் பேரிடியை இறக்கிய மத்திய அரசு.. நெல்லின் ஈர அளவை உயர்த்த முடியாதாம்

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த முடியாது என்று கூறி உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Nov 20 2025, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு
Image Credit : Asianet News

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த பருவமழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து அவற்றின் ஈரப்பத அளவு உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி ஆணை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மெட்ரோ திட்டத்தை தொடர்ந்து நெல் கொள்முதல் விவகாரம்
Image Credit : Asianet News

மெட்ரோ திட்டத்தை தொடர்ந்து நெல் கொள்முதல் விவகாரம்

முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு.

Related Articles

Related image1
சிறு வயதில் தமிழ் கற்கவில்லை என வருத்தம்..! தமிழ்க் கடவுள் முருகன் குறித்தும் பேசிய பிரதமர் மோடி!
Related image2
கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு தடை போடும் மத்திய அரசு..! தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக.. கொதிக்கும் முதல்வர்..
34
தமிழ்நாட்ன் குரல் பிரதமருக்கு கேட்காதது ஏன்..?
Image Credit : Asianet News

தமிழ்நாட்ன் குரல் பிரதமருக்கு கேட்காதது ஏன்..?

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

44
வேளாண் மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்
Image Credit : Google

வேளாண் மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
நரேந்திர மோடி
மத்திய அரசு
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image2
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Recommended image3
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Related Stories
Recommended image1
சிறு வயதில் தமிழ் கற்கவில்லை என வருத்தம்..! தமிழ்க் கடவுள் முருகன் குறித்தும் பேசிய பிரதமர் மோடி!
Recommended image2
கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு தடை போடும் மத்திய அரசு..! தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜக.. கொதிக்கும் முதல்வர்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved