MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அஜித்குமார் மரணத்தில் நிகிதா அளித்தது பொய் புகார்.. CBI அதிரடி ரிபோர்ட்..! ஆக்ரோஷமான நீதிபதி

அஜித்குமார் மரணத்தில் நிகிதா அளித்தது பொய் புகார்.. CBI அதிரடி ரிபோர்ட்..! ஆக்ரோஷமான நீதிபதி

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஐ, அஜித்குமார் மீதான நிகிதாவின் நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 04 2026, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் மரணம்
Image Credit : Asianet News

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் மரணம்

2025ம் ஆண்டு ஜூன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் என்ற இளைஞர் மீது கோவிலுக்கு வந்த நிகிதா என்ற பெண் அளித்த நகை திருட்டு புகாரில் கோவில் காவலாளி கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காவலாளி அஜித்குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

24
அடித்தே கொலை செய்த போலீஸ்..
Image Credit : Asianet News

அடித்தே கொலை செய்த போலீஸ்..

சிறையில் உள்ள காவலர்கள் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் சிபிஐ அதிகாரிகள் இன்று வழக்கு தொர்பான அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில், “காவலாளி மீதான நிகிதாவின் நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை. மேலும் உயர் அதிகாரிகள் அளித்த அழுத்தம் காரணமாகவே இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Now Playing
''வேர் இஸ் நிகிதா"அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை - ராமதாஸ்
Related image2
அஜித் குமார் வழக்கில் திடீர் திருப்பம்.! அப்படினா நிகிதா சொன்னது பொய்யா? சிபிஐ விசாரணையில் சிக்கிய முக்கிய தகவல்
34
மனம் பதறுகிறது - நீதிபதி வேதனை
Image Credit : ANI

மனம் பதறுகிறது - நீதிபதி வேதனை

நிகிதா அளித்தது பொய் புகார் என்று தெரிந்ததும் ஆவேசமடைந்த நீதிபதி ஸ்ரீமதி ஒன்றுமே இல்லாத விவகாரத்தில் ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளீர்கள். இந்த வழக்கில் யராக இருந்தாலும் வழக்கு நிறைவடையும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும். இந்த வழக்கில் காவலர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். காவலர்களின் செயல்பாடுகளைப் பார்த்தால் மனம் பதறுவதாக நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

44
நிகிதா மீது நடவடிக்கை..
Image Credit : Google

நிகிதா மீது நடவடிக்கை..

மேலும் நகை மாயமானதாக பொய் புகார் அளித்த நிகிதா மீது மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில் பொய் புகார் தொடர்பாக தனியாக அறிக்கை தாக்கல் செய்வதாக சிபிஐ அதிகாரிகள் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல்
அஜித் குமார்
Latest Videos
Recommended Stories
Recommended image1
முதல்வர் பதவியே கொடுத்தாலும் கூட்டணி இல்லை.. தனித்து தான் போட்டி..! களத்தை அதிரவிடும் தவெக
Recommended image2
ஓயாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை.. என்ன காரணம்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குளு குளு அப்டேட்
Recommended image3
Now Playing
சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
Related Stories
Recommended image1
Now Playing
''வேர் இஸ் நிகிதா"அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை - ராமதாஸ்
Recommended image2
அஜித் குமார் வழக்கில் திடீர் திருப்பம்.! அப்படினா நிகிதா சொன்னது பொய்யா? சிபிஐ விசாரணையில் சிக்கிய முக்கிய தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved