MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அஜித் குமார் வழக்கில் திடீர் திருப்பம்.! அப்படினா நிகிதா சொன்னது பொய்யா? சிபிஐ விசாரணையில் சிக்கிய முக்கிய தகவல்

அஜித் குமார் வழக்கில் திடீர் திருப்பம்.! அப்படினா நிகிதா சொன்னது பொய்யா? சிபிஐ விசாரணையில் சிக்கிய முக்கிய தகவல்

திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணையில் புதிய திருப்பங்கள். கார் சாவி விவகாரத்தில் நிகிதாவின் முரண்பட்ட வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 09 2025, 12:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கியமான வழக்காகும். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய வந்தவர் அஜித்குமார் (வயது 29), கோயிலுக்கு வந்த நிகிதா என்பவரின் நகைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

இதில் விசாரணையின்போது சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார். விசாரணையின்போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Google

இந்த வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டார். சிபிஐ தனது விசாரணையை ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கியது, சிபிஐ அதிகாரிகள் கைதான காவலர்களிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அஜித்குமாரை சித்திரவதை செய்ய மிளகாய் பொடி பயன்படுத்தப்பட்டதாகவும், இதை மடப்புரத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் வாங்கியதாகவும் காவலர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். மேலும் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி இடங்களிலும் ஆய்வு செய்தனர். மேலும் புகார் அளித்த நிகிதாவிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.

35
Image Credit : Google

இந்த நிலையில் கோயிலில் கார் எப்போது பார்க்கிங் செய்யப்பட்டது. சாவியை எப்போது நிகிதாவிடம் அஜித்குமார் ஒப்படைத்தார் என்ற தகவல் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூன் 27ம் தேதி காலை 9 மணிக்கு கோயிலுக்கு வந்த நிகிதா காரை பார்க் செய்து தருமாறு அஜித்குமாரிடம் கூறி சாவியை கொடுத்துள்ளார். 

அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் அருணிடம் சாவியை கொடுத்து காரை கோயில் எதிரே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 5 நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்து விட்டார். ஆனால் நிகிதா கொடுத்த புகாரில் கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தந்ததாக தெரிவித்திருந்தார்.

45
Image Credit : Asianet News

மேலும் காரை அஜித்குமாரும் அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் அருணும் சேர்ந்து வடகரை வரை ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. சிபிஐ அதிகாரிகளும் முதல் நாள் விசாரணை வடகரையில் இருந்துதான் தொடங்கினர். வழிநெடுக உள்ள சிசிடிவி கேமராக்களில் கார் வந்ததாக தெரியவில்லை.

 காரை நிகிதாவே ஓட்டி சென்று, மீண்டும் அவரே ஓட்டி வரும் காட்சிகள் மட்டுமே பதிவாகி இருந்தது. மேலும் சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலத்திற்கு பிறகு நிகிதாவின் காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 5 நிமிடத்தில் சாவியை ஒப்படைத்துள்ளனர்.

55
Image Credit : Asianet News

மீண்டும் பார்க்கிங்கில் இருந்து காரை 10 நிமிடத்தில் எடுத்து வந்து கொடுத்துள்ளனர். எனவே கோயிலுக்கு நிகிதா காரில் வந்த பின் கோயிலை விட்டு கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெரியவந்துள்ளது. 20 நாட்களுக்கும் மேலாக விசாரணை நீடித்து வரும் நிலையில், தற்போது புகார் அளித்த நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது தெரிய வந்துள்ளது. 

மேலும் நிகிதாவின் கார் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. எனவே கோவிலில் இருந்தே நிகிதாவின் கார் எங்குமே செல்லாத நிலையில், நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
காவல்
குற்றம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
வெற லெவல்... வெள்ள மீட்புப் பணியில் அசத்திய மோப்ப நாய்கள் சாரா, ஜான்ஸி, ஒப்பனா!
Recommended image2
அடப்பாவிகளா... ஸ்டாலின் திட்ட முகாமிலேயே லஞ்சமா? காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved