காவிரி நீர் விவகாரம்.. தமிழகத்தை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக - திருச்சியில் மறுமலர்ச்சி திமுக-வினர் ஆர்ப்பாட்டம்!
மறுமலர்ச்சி திமுகவின் நிறுவனர் வைகோ அவர்களின் மகன் துரை வையாபுரி தலைமையின் இன்று திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனையான காவிரி நதிநீர் விவகாரத்தில், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறோம் என்று துறை வையாபுரி கூறினார்.
Trichy
இன்று அக்டோபர் 16ம் தேதி, பாஜக அரசை கண்டித்து காவிரி பிரச்சனை குறித்தும் அண்ணல் மகாத்மா காந்தியின் பெயரில் உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மறுமலர்ச்சி திமுக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் பேசிய துரை வையாபுரி பின்வருமாறு கூறினார்...
காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தஞ்சை மண்டலம் தான், தரணிக்கே சோறு போடுகின்றது. எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்திய சோலையாக காட்சி தரும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் நிலை என்ன? தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் அவல நிலையில் இருக்கிறது.
பாஜக தமிழ்நாட்டிற்கு தேவையற்ற சித்தாந்தம் - கருணாஸ் பரபரப்பு பேட்டி
Cauvery Issue
விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? இல்லை என்பது தான் ஒரே பதில். முப்போகமும் விளைந்து செழிக்கின்ற வயல் வெளிகள் இன்று தண்ணீர் இல்லாமல் கண் முன்னே கருகி கொண்டு இருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 இலட்சம் ஏக்கராக இருந்த பாசன பரப்பு தற்போது 15 இலட்சம் ஏக்கராக குறைந்து விட்டது.
பாதிக்கு பாதி நிலம் மட்டுமல்ல. பாதிக்கும் மேற்பட்ட மக்களும் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்து விட்டார்கள். ஆனால், கர்நாடகாவில், முன்பு இருந்ததை விட தற்போது, விவசாய பாசன பரப்பு 4 மடங்காக கூடிவிட்டது. 'நடந்தாய் வாழி காவேரி' என்கிறது சிலப்பதிகாரம். காவிரியில் தண்ணீர் நடந்து அல்ல. தவழ்ந்து கூட வரவில்லை.
Marumalarchi DMK
இதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டிற்க்கு தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டிக்கிறேன் கர்நாடகாவில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என போராடும் பாஜகவையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கண்டிக்கிறேன்.
காவிரியில் தமிழகத்திற்கு உரிமையான நீரை பெறுவதற்கு நாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக போராடி வந்திருக்கிறோம். நீண்ட காலம் சட்டப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். பல உயிரிழப்புகளை சந்தித்து இருக்கிறோம். உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடியும் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடகம் மதிப்பது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் சொல்வதையும் கர்நாடகம் பொருட்படுத்துவது இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Trichy Protest
அவர்கள் அறிக்கையில் பின்வருமாறு.. "நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்தும் விதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு, நேரடியாக பலகோடி பட்டியலின மக்களின் வாழ்வை இதன்மூலம் சிதைக்கிறது. அழிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பல தவறான கொள்கையால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி குறைப்பை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். அண்ணல் மகாத்மா காந்தியின் பெயரில் உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டும்"என்று அவர்கள் கூறினார்.