Asianet News TamilAsianet News Tamil

பாஜக தமிழ்நாட்டிற்கு தேவையற்ற சித்தாந்தம் - கருணாஸ் பரபரப்பு பேட்டி

பாஜக தமிழ்நாட்டிற்கு தேவையில்லைாத சித்தாந்தம் என்றும், அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்றும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

bjp is unwanted ideology for tamil nadu says karunas vel
Author
First Published Oct 16, 2023, 5:52 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் முக்குலத்தோர் புலிபடை நிறுவனரும், நடிகருமான கருணாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு கிராமங்களில் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து அரூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ கருணாஸ், வருகிற 27-ம் தேதி மருது சகோதரர்கள் நினைவை போற்றும் வகையிலும், 30-ம் தேதி தேவர் ஜெயந்தி வருகிறது. இதனை இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்கின்ற வகையில், சுற்றுப்பயணம் மேற்கொண்டோம்.

பலமுறை நான் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதை, பீகார் மாநிலத்தை போன்று, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு 20,000 நாட்கள் மேல் சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளார். அவரின் தியாக உணர்வை போற்றும் வகையில், எதிர்கால சந்ததிக்கு நினைவு கூறும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். 

சினிமா பாணியில் நள்ளிரவில் ஆமினி பேருந்தை சேஸ் செய்த அதிகாரிகள்; நாகையில் பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994-ம் ஆண்டு கள்ளர், மறவர், அகமுடையர் சமூகத்தை, தேவரினம் அறிவித்து வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். பாஜக என்பது தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத சிந்தாந்தம். இதனை தொடக்கத்தில் இருந்தே நான் எதிர்த்து வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக, தன்னிச்சையாக, தனித்துவமான முன்னேற்பாடுகளை செய்தவர் என்பது நாடறியும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அதற்கு தலைமை ஏற்றவர்கள் எந்தெந்த தீர்மானத்தை எல்லாம் வரவேற்றார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. நாடே அறியும். இந்நிலையில் பாஜக அதிமுக கூட்டணி பிரிந்து இருக்கிறது என்பது 99 சதவீதம் யாருக்குமே நம்பிக்கை இல்லை.

சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு; பேருந்துக்காக காத்திருந்நத போது சோகம்

அமலாக்கத் துறையின் நடவடிக்கை என்பது இந்த பாஜக ஆட்சியில் தான், அரசியல் ரீதியான கால் புணர்ச்சியிலே சோதனை நடத்தி வருகிறார்கள்.  பாஜகவை சார்ந்தவர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள், அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை. பாஜக யாரை தன் வசப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களோ?  யாரை எதிர்க்கட்சியாக நினைக்கிறார்களோ? எந்த அரசை கவிழ்க்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்கள் மீதுதான் அமலாக்கத்துறை சோதனை ஏவப்படுகிறது. இந்த அமலாக்கத்துறை என்பது பாஜகவின் ஏவுதுறை என்று தான் சராசரி மக்களும் பார்க்கிறார்கள் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios