- Home
- Tamil Nadu News
- திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு.! வெளியான ஷாக் தகவல்
திருமங்கலத்தில் திருடு போன சொகுசு கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு.! வெளியான ஷாக் தகவல்
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சொகுசு கார்களைத் திருடி வந்த கும்பல் கைது, திருடப்பட்ட கார்களை பாகிஸ்தான் எல்லை வரை ஓட்டிச் சென்று விற்பனைக்குத் தயார் செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் மர்ம கும்பல் சொகுசு கார்களை நோட்டமிட்டு திருடி வருகிறது. அந்த வகையில் பென்ஸ், ஆடி, ஜாக்குவார் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் திருடப்படுவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து போலீசாரும் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியில் சர்வீஸ் சென்டர் ஒன்றில் இருந்து சொகுசு கார்களை திருட திட்டமிட்டு களத்தில் இறங்கிய திருடன் சட்டேந்திரசிங் ஷகாவாட்டை கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியில் வைத்து கைது செய்தனர்
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சர்வீஸ் சென்டர்களில் விடப்பட்ட 3 சொகுசு கார்கள் திருடப்பட்டதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை போலீசார் மேற்கொண்டு வந்த நிலையில் தான் சர்வீஸ் சென்டரில் வரும் கார்களை நோட்டமிட்டு திருடுவதை வாடிக்கையாக ஒரு கும்பல் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடிய பிரபல கார் திருடன் சட்டேந்திரசிங் ஷகாவாட் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. 20 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சொகுசுக்கார்களை மட்டும் குறி வைத்து திருடி வந்த நபர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமங்கலம் திருடப்பட்ட 3 காரில் ஒரு கார் பாகிஸ்தான் பார்டர் பகுதியான ராஜஸ்தான் மாநில எல்லையில் மீட்கப்பட்டுள்ளது.
அந்த கார் அந்தக் காரின் பதிவு எண் மற்றும் தோற்றம் முற்றிலும் மாற்றப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த போது அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 80 நாட்களில் 45 ஆயிரம் கிலோ மீட்டர் வாகனத்தை தொடர்ந்து ஓட்டி வந்ததும், போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக வாகனத்தின் நிற்காமல் இயக்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் திருடப்பட்ட சொகுசு கார்கள் பாகிஸ்தான் வரை பயணித்து விற்பனைக்கு போன சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.