- Home
- Tamil Nadu News
- நள்ளிரவில் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் திடீரென புகுந்த போலீஸ்.! அதிர்ச்சியில் தவெக
நள்ளிரவில் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குள் திடீரென புகுந்த போலீஸ்.! அதிர்ச்சியில் தவெக
தவெக தலைவர் விஜய் வீட்டில் நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்தினர். கரூர் சம்பவத்திற்கு பிறகு நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் இந்த நிகழ்வு தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மக்களை சந்திக்க தொகுதி தொகுதியாக அரசியல் கட்சியினர் களம் இறங்கியுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையில் கலக்கி வந்த விஜய், திமுகவை வீழ்த்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கினார்.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டு பிரம்மாண்ட மாநில மாநாட்டை நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டமாக பொதுமக்களை சந்திக்கும் வகையில் திட்டமிட்ட அவர், திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சார பயணத்தை முடித்தார். அடுத்ததாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அளவுக்கதிகமான கூட்டம் காரணமாக கரூரில் 41 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைது செய்ய போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். எந்த நேரமும் போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டில் நேற்று நள்ளிரவு போலீசார் உள்ளே புகுந்து சோதனை மேற்கொண்டது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நள்ளிரவு 1.50 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அலர்ட் செய்யப்பட்ட போலீசார் சுமார் அரை மணி நேரம் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எந்த வித சந்தேகத்திற்கும் இடமான பொருட்கள் கிடைக்கவில்லை.
இதனயைடுத்து அந்த மிரட்டல் போன் புரளி என தெரியவந்தது. இந்த சம்பவம் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்ம நபர் ஒருவர் விஜய்யின் பின் பக்க வழியாக உள்ளே சென்று மாடியில் பதுங்கி இருந்துள்ளார். அவரை விஜய் கண்டுபிடித்த போலீசாரஇடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.