அதிர்ச்சி.. 73 வயது காங்கிரஸ் தலைவருக்கு புடவை கட்டிய பாஜகவினர்..! ஏன் தெரியுமா?
பிரதமர் மோடியை விமர்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரேவை, பாஜக ஆதரவாளர்கள் சேலை அணிய வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மோடியை விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் நடந்த ஒரு சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் உல்காஸ்நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரே (வயது 73), பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவு பாஜக ஆதரவாளர்களின் கோபத்தை தூண்டியதால், அவரை சாலையோரத்தில் பிடித்து, பெண்கள் அணியும் சேலையை அணிவித்து கட்டாயப்படுத்தி வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
காங்கிரஸ் நிர்வாகிக்கு சேலை கட்டிய பாஜகவினர்
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “ஒரு ஜனநாயக நாட்டில், கருத்து வெளியிடும் உரிமையே தாக்குதலுக்குள்ளாகிறது. 73 வயதான ஒருவரை அவமானப்படுத்துவது மிகவும் கேவலமானது,” எனக் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி பகாரே கூறுகையில், பேஸ்புக்கில் உள்ள போஸ்ட்டை நான் Forward மட்டுமே செய்தேன் என தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது பாஜக தலைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் தன்னிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டு பின்னர் சேலையை அணிவித்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக சட்ட ரீதியாக போராட உள்ளதாக கூறினார்.
பாஜகவினருக்கு எதிர்ப்பு
இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் நந்து பரப், ஊடகங்களிடம் பேசியபோது, “பிரதமரை அவமதிக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டால், அதை எங்கள் கட்சியினர் ஒருபோதும் சகிக்கமாட்டார்கள். இப்போது எளிய எச்சரிக்கை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த முறை இன்னும் கடுமையான பதில் கொடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் குறைக்கும் முயற்சியாக பலராலும் கண்டிக்கப்படுகிறது.
ஒருபுறம், பாஜக ஆதரவாளர்கள் தங்கள் தலைவரை அவமதிக்க முடியாது எனக் கூறுகிறார்கள். மறுபுறம், எதிர்க்கட்சிகள், “கருத்து வெளிப்படுத்தும் உரிமையைப் பறிக்கும் வகையில் நடந்து கொள்வது, அரசியல் ஒழுங்கு மீறல்” எனத் தாக்கம் கொடுக்கின்றனர்.