பந்திப்பூர் ஜீப் சவாரி முதல் பொம்மன் பெல்லி சந்திப்பு வரை... பிரதமர் மோடியின் இன்றைய ட்ரிப் போட்டோஸ் இதோ
பிரதமர் மோடி பந்திப்பூரில் ஜீப் சவாரி செய்தது முதல் முதுமலையில் பொம்மன் பெல்லியை சந்தித்தது வரை அழகிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு இதோ.
பிரதமர் மோடி இன்று காலை கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் உள்ள வன விலங்கு சரணாலயத்தை சுற்றிப்பார்ப்பதற்காக டிப் டாப் ஆக உடை அணிந்துகொண்டு கிளம்பியபோது எடுத்த புகைப்படம்.
ஹெலிகாப்டர் மூலம் பந்திப்பூருக்கு வந்த பிரதமர் மோடிக்கு அங்குள்ள அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்த தருணம் இது.
இதையடுத்து அங்கிருந்து ஜீப் மூலம் வனப்பகுதியில் சவாரி மேற்கொண்டார் மோடி. அவரை வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.
மொத்தம் 20 கிலோ மீட்டர் ஜீப் சவாரி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள விலங்குகளையும், எழில்கொஞ்சும் இயற்கை அழகையும் ரசித்தபோது எடுத்த கிளிக் இது.
இதையும் படியுங்கள்... watch : முதுமலையில் யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள சுவர் ஒன்றில் வரையப்பட்டு இருந்த புலிகளின் ஓவியத்தின் முன் மோடி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இது.
வனப்பகுதிக்குள் சுற்றித்திரியும் விலங்குகளை பைனாக்குலர் உதவியுடன் பிரதமர் மோடி ரசித்து பார்த்த தருணம் இது.
பந்திப்பூர் சரணாலயத்தை சுற்றிப்பார்க்க சென்றபோது, அங்கு தன்னுள் இருக்கும் போட்டோகிராபி திறமையை வெளிப்படுத்தி, அங்கிருந்தவர்களை பிரதமர் மோடி அசரவைத்த நிகழ்வு இது.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் முதுமலைக்கு வந்த மோடி. அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று பொம்மன் பெல்லியை சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்... Watch : ‘ஆஸ்கர் ஜோடி’ பொம்மன் - பெல்லியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
பொம்மன் பெல்லி தம்பதி வளர்த்த பொம்மி மற்றும் ரகு என்கிற யானைகள் மோடியுடன் கொஞ்சி விளையாடிய கியூட்டான தருணத்தை இதில் காணலாம்.
மோடியை வரவேற்கும் விதமாக தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள குட்டி யானை ஒன்று தன் தும்பிக்கையை தூக்கி வரவேற்ற தருணம் இது.
இதையடுத்து அங்கிருந்து கிளம்பும் போது ஆஸ்கர் ஜோடிகளான பொம்மன் பெல்லியிடம் பிரதமர் மோடி நன்றி கூறி விடைபெற்றபோது எடுத்த புகைப்படம் இது.
பின்னர் முதுமலையில் இருந்து மைசூருக்கு காரில் செல்லும் வழியில் மசினகுடியில் தன்னைக் காண கூடியிருந்த மக்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களைப் பார்த்து மோடி கையசைத்து நன்றி தெரிவித்துவிட்டு சென்றபோது எடுத்த புகைப்படம் இது.
இதையும் படியுங்கள்... watch : தமிழக மக்களின் அன்பால் திளைத்துப்போன மோடி... திடீரென சாலையில் இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்