MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஷூட்டிங்கில் விஜய்.! தலைவர் இல்லாமல் தொடங்கிய தவெக கூட்டம்- அதிர்ச்சியில் நிர்வாகிகள்

ஷூட்டிங்கில் விஜய்.! தலைவர் இல்லாமல் தொடங்கிய தவெக கூட்டம்- அதிர்ச்சியில் நிர்வாகிகள்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி, பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. உட்கட்சி மோதல்கள், நிர்வாகிகள் விலகல், ஆலோசகரின் சர்ச்சைக்குரிய ஆடியோ என பல பிரச்சனைகள். இந்த சூழலில் தவெக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jan 10 2025, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திராவிட கட்சிக்கு எதிராக தவெக

தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு எதிராக அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்தள்ளவர் நாடாளுமன்ற மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலையும் புறக்கணித்துள்ளார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமான அளவில் முதல் மாநாடு  நடைபெற்றது.

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து விஜய்யின் அரசியல் சூடு பிடிக்கும் எதிர்பார்த்த நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
TVK Vijay

TVK Vijay

வெளியில் வராத விஜய்

அந்த வகையில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நேரடியாக சம்பவ இடத்திற்கு செல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து நிவராண உதவிகளை வழங்கியது கிண்டலுக்கு உள்ளானது. அடுத்ததாக தியாகிகள், மூத்த தலைவர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கு கூட சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சிலைகளுக்கு நேரடியாக சென்று மாலை அணிவிக்காமல் வீட்டில் ஒரு புகைப்படத்தை வைத்து அதற்கு மாலை அணிவித்து புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது.

35
TVK Vijay

TVK Vijay

உட்கட்சி மோதல்

இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் தவெக நிர்வாகிகளுக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. நீ பெரியவனா.? நான் பெரியவனா என்ற போட்டி தொடங்கியுள்ளது. இதனால் பல மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர். மேலும் தவெக அரசியல் ஆலோசகர்  ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில்  தவெக தலைவர் விஜய்யை விட தன்னையே அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும்  விஜய்யின் இடத்திற்கு வர, பொதுச்செயலாளர் ஆசைப்படுவதாகவும் விமர்சித்து பேசியுள்ளார்.

45

வெளியான ஆடியோ

மற்ற கட்சிகளில் கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி என  தலைவர்களை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்பார்கள் ஆனால் இங்கு விஜய்யை விட ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதாக கூறியுள்ளார். 30 சதவிகித வாக்குகளை வாங்க நான் திட்டமிட்டு வரும் நிலையில் 2 சதவிகித வாக்குகள் கூட வாங்க முடியாத நிலைக்கு தவெக செல்லும் நிலை உருவாகியிருப்பதாக கூறியிருந்தார். இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் இன்று ஆலோசனை குழு கூட்டம் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

55

விஜய் இல்லாமல் ஆலோசனை கூட்டம்

இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால்  பட சூட்டிங்கிற்கு விஜய் சென்று விட்டதால் கூட்டத்தில் பங்கேற்வில்லையென கூறப்படுகிறது. இதனால்  தவெகவின் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட அணி தலைவர்கள கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்  கட்சியில் உட்கட்டமைப்பு பணியை மேற்கொள்வது, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் தமிழகம் முழுவதும்  110 பேர் மாவட்ட செயலாளர்களாக  நியமிக்கப்பட இருப்பதாகவும்,அந்த வகையில் 2 அல்லது 3 தொகுதிக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
Recommended image2
விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Recommended image3
Magalir Urimai Thogai: மே மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும்..? முதல்வர் விஜய் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved