MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இலவசமாக அறுபடை வீடு சுற்றுலா.! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அறநிலையத்துறை

இலவசமாக அறுபடை வீடு சுற்றுலா.! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அறநிலையத்துறை

தமிழக அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடு ஆன்மிக பயணம் மூலம் 2024-2025 நிதியாண்டில் 2022 மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உட்பட ஆறு முருகன் கோயில்களுக்கு கட்டணமில்லா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Mar 05 2025, 07:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழகத்தில் அறநிலையத்துறை சார்பாக எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி கோயில்களில் குடமுழுக்கு, அன்னதான திட்டம், கோயில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு உள்ளிட்டவைகள் மட்டுமின்றி, அம்மன் கோயில் சுற்றுலா, பெருமாள் கோயில் ஒரு நாள் சுற்றுலா, ராமேஸ்வரம்- காசி சுற்றுலா போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அறுபடை வீடு ஆன்மிக பயணமும் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

24
அறுபடை வீடு சுற்றுலா

அறுபடை வீடு சுற்றுலா

இந்த நிலையில்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024-2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் இதுவரை 1.822 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

34
200 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு சுற்றுலா

200 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு சுற்றுலா

நேற்றைய தினம் (04.03.2025) கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் திருத்தணி. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிருந்து சுவாமி தரிசனம் செய்து அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். 

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு. குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் அறநிலையத்துறை சார்பாக வழங்கப்படுகின்றன.

44
2,022 மூத்த குடிமக்கள் பயன்

2,022 மூத்த குடிமக்கள் பயன்

மேலும், பக்தர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024 2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Recommended image2
2 நாள் விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி.. போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்!
Recommended image3
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved