MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சியா? குற்றவாளியை சும்மாவிடக்கூடாது! வானதி சீனிவாசன்!

திமுக முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சியா? குற்றவாளியை சும்மாவிடக்கூடாது! வானதி சீனிவாசன்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 23 2025, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் பாலியல் வன்கொடுமை
Image Credit : our own

ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் பாலியல் வன்கொடுமை

அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழ்நாடு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் அடையாளமான சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, அப்பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகி அல்ல. திமுக அனுதாபி என சட்டமன்றத்திலேயே சொல்ல வேண்டிய நிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தள்ளப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

24
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல்
Image Credit : Asianet News

திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் மீது, கல்லூரி மாணவி ஒருவர் அளித்துள்ள புகார் அதிர்ச்சி அளிக்கிறது. தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், திமுக முக்கியப் பிரமுகர்களுக்கு இரையாக்க முயன்றதாக கூறியதுடன், ஒரு அமைச்சர், அவரது உதவியாளர் பெயரையும் குறிப்பிட்டிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

Related Articles

Related image1
தமிழகத்தில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் அரங்கேற்றம்! திமுகவை விளாசும் டிடிவி.தினகரன்!
Related image2
அரக்கோணம் பாலியல் புகார்! திமுக முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?
34
அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த பிறகே வழக்குப் பதிவு
Image Credit : Asianet News

அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த பிறகே வழக்குப் பதிவு

திமுக நிர்வாகி தெய்வசெயல் மீது மாணவி புகார் அளித்தவுடன், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவியின் புகார் ஊடகங்களில் வெளியாகி, அரசியல் கட்சித் தலைவர்களும் பலரும் கண்டனம் தெரிவித்த பிறகே காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் இதுதான் நடந்தது. எங்கு பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், அதை அப்படியே மறைக்கவே திமுக அரசு முயற்சிக்கிறது. விஷயம் வெளியாகி வேறு வழியில்லாத நிலை ஏற்படும்போது மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளும் அதன்பிறகு என்ன ஆகிறது என்றே தெரியவில்லை.

44
தமிழ்நாடு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
Image Credit : our own

தமிழ்நாடு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

அரக்கோணம் கல்லூரி மாணவி கூறிய புகார்கள் குறித்து காவல்துறை தீர விசாரித்து, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது வரவேற்கத்தக்கது. தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழ்நாடு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வானதி சீனிவாசன்
பிஜேபி
திமுக
மு. க. ஸ்டாலின்
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
தமிழகத்தில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் அரங்கேற்றம்! திமுகவை விளாசும் டிடிவி.தினகரன்!
Recommended image2
அரக்கோணம் பாலியல் புகார்! திமுக முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன் கிடைத்தது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved