- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் காவலர் தேர்வு.! தேர்வர்களுக்கு எதிர்பாரா அசத்தலான தகவலை சொன்ன தமிழக அரசு
தமிழகத்தில் காவலர் தேர்வு.! தேர்வர்களுக்கு எதிர்பாரா அசத்தலான தகவலை சொன்ன தமிழக அரசு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3665 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது.

தமிழகத்தில் காவலர்களுக்கான தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3644 + 21 (shortfall vacancy) இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றம் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான 21.08.2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு 09.11.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 21.09.2025 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு (அ) அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18-26 ஆகும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு தளர்த்தப்படும். வயது வரம்பு, தேர்வு நடைமுறை, பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்களை https://tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
இந்த நிலையில் இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இத்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 12.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும் TNPSC, TNUSRB, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் உள்ளன. மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் study hall வசதியும் உள்ளது.
தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்த ஆட்சியர்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான https://tamilnaducareerservices.tn.gov.in/மென் பாடகுறிப்புகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை பின்வரும் கூகுள் படிவத்தில் கொள்ளப்படுகின்றார்கள் நிரப்புமாறு கேட்டு https://forms.gle/aSocZmn6PokHPcmv5
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மேலும், விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் சேர்ந்த சேர்ந்து தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.