- Home
- Tamil Nadu News
- விஜய் ரொம்ப அகந்தையில் பேசுற மாதிரி தெரியுது.. எல்லா அமித்ஷா கொடுக்குற தைரியம் தானு நினைக்குறேன் - சபா நாயகர் அப்பாவு
விஜய் ரொம்ப அகந்தையில் பேசுற மாதிரி தெரியுது.. எல்லா அமித்ஷா கொடுக்குற தைரியம் தானு நினைக்குறேன் - சபா நாயகர் அப்பாவு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பேச்சில் அகந்தைத் தெரிவதாக குறிப்பிட்டுள்ள சபாநாயகர் அப்பவு, அமித்ஷா கொடுக்கின்ற தைரியத்தில் தான் அவர் இப்படி பேசுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

விஜய்யை இயக்கும் மத்திய அரசு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார், சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் ஆனந்த் போஸ் ஆகியோரிடம் இது தொடர்பாகப் பேசியதாகப் பல பத்திரிகை செய்திகள் வந்துள்ளன.
முதல்வரை மிரட்டும் தொணியில் விஜய் பேசுகிறார்
முதலமைச்சரை மிரட்டும் தொணியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோகால் வேறு. பிரதமர் மற்றும் முதல்வர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனத்துடனும் இருக்க வேண்டும்.
"தமிழக வெற்றி கழகத்தைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறதா?" என்ற கேள்விக்கு, "பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல 'தலைவா' படப் பிரச்சனைக்காக மூன்று நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல,".
வரி குறப்பால் ரூ.2.5 லட்சம் கோடி சலுகை
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைத்திருப்பதால் மக்கள் சேமிப்பு உருவாகும் என பிரதமர் சொல்லியுள்ளார். அப்படியானால், இத்தனை ஆண்டுகள் சேமித்த 20 லட்சம் கோடி ரூபாயை அவர் எங்கே வைத்திருக்கிறார்? மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது,
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 831 கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கி, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
பாமக கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்த கேள்விக்கு, "சட்டமன்றம் கூடும்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம்," என்று கூறினார்.