பாஜக கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை.! இது தான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
Annamalai dengue fever : தமிழக பாஜகவின் சிந்தனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்காதது, அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என்ற விவாதத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜகவும் அண்ணாமலையும்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, தனது அதிரடி அரசியல் காரணமாக கட்சியை பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றார். இதன் காரணமாக பாஜக மீது பலரும் தங்களது பார்வைகளை திருப்பினார்கள். ஆளுங்கட்சிக்கு கடும் போட்டியாக பாஜக திகழ்ந்தது. தினந்தோறும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தார். மேலும் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேட்டி கொடுப்பது மட்டுமில்லாமல் வீடியோ, ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார்.
அண்ணாமலையின் அதிரடி அரசியல்
ஒரு கட்டத்தில் அதிமுக தலைமை மீதான விமர்சனம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணியானது உடைந்தது. இதன் காரணமாக பாஜக தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட நிலையில் பல இடங்களில் டெபாசிட் இழந்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி கிடைத்தது.
இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக மற்றும் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி ஒன்றிணைய இடையூறாக இருந்த அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கம்
இதனையடுத்து பாஜக கட்சி நிகழ்வுகளில் அண்ணாமலை பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. இந்த சூழலில் இன்று செங்கல்பட்டு அக்கரையில் உள்ள விடுதியில் பாஜகவின் மாநில சிந்ததனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொருப்பாளர் பிஎல் சந்தோஷ், நயினார் நாகேந்திரன், எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
அண்ணாமலைக்கு டெங்கு காய்ச்சல்
இது பாஜகவினர் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுகிறாரா என விவாதிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், தனக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் இன்றைய பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார்.