MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம்.! நானே தலைவர் - ராமதாஸ் அதிரடி

பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம்.! நானே தலைவர் - ராமதாஸ் அதிரடி

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை வழிநடத்தவே இந்த முடிவு என்றும், கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Ajmal Khan
| Updated : Apr 10 2025, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

Ramadoss Anbumani clash :  தமிழகத்தில் திமுக- அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் பாமக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த தேர்தலில் தருமபுரி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

இந்த நிலையில் பாமக நிறுவனராக உள்ள ராமதாசுக்கும், தலைவராக உள்ள அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் அணி தலைவர் நியமனம் செய்யப்பட்டப்போது பகிரங்கமாக வெளிப்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதான உடன்பாடு ஏற்பட்டது. 

Breaking News | நானே பாமக தலைவர் - தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு !

 

23
anbumani ramadoss

anbumani ramadoss

ராமதாஸ்- அன்புமணி மோதல்

இந்த சூழ்நிலையில் மீண்டும் தந்தை மகன் இடையே மோதல் உருவாகியுள்ளது. திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாமகவுக்கு நான் தான் தலைவராக இருப்பேன் என  தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார்.எனவும் பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என கூறினார். 

33
ramadoss

ramadoss

பதவி ஆசை இருந்ததில்லை

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி ஆசை எனக்கு இருந்ததில்லை என தெரிவித்தார். மேலும் கூட்டணி குறித்த விஷயங்களுக்கு நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுப்போம் எனவும். அன்புமணி நீக்கம் செய்யப்படதற்கான காரணங்கள் பின்னர் தெரிவிப்போம் என ராமதாஸ் கூறியுள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றுமே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
Recommended image2
Now Playing
தமிழகம் முழுவதும் இன்று டமால் டுமீல்! பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்
Recommended image3
Now Playing
சட்ட ஒழுங்கு சீர்கேடு மாறவேண்டும் என்றால் எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டும் ! SP. வேலுமணி பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved