- Home
- Tamil Nadu News
- ஜனநாயகம் படுகொலை! அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்! ராமதாஸிக்கு எதிராக திலகபாமா!
ஜனநாயகம் படுகொலை! அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்! ராமதாஸிக்கு எதிராக திலகபாமா!
Thilagabama Opposes Ramadoss Announcement:பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Anbumani
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் இடையே கடந்த சில நாட்களாவே மோதல் போக்கு நிலவி வருவதாக செய்தி வெளியாகின. ஆனால், இந்த மோதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் அணி தலைவர் நியமனம் செய்யப்பட்டப்போது பகிரங்கமாக வெளிப்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் நிர்வாகிகள் சமாதானம் செய்து வைத்தனர்.
Anbumani Vs Ramadoss
அன்புமணி நீக்கம்
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ்: பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், ராமதாஸ் எனும் நான் நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன். மேலும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்து இருக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ராமதாஸ் முடிவுக்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம்.! நானே தலைவர் - ராமதாஸ் அதிரடி
Thilagabama
திலகபாமா எதிர்ப்பு
இதுதொடர்பாக திலகபாமா கூறுகையில்: பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை டாக்டர் ராமதாஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானதுதான். டாக்டர் ராமதாஸ் காட்டிய அன்பை ருசித்தவள் நான். ஆனால் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கியதை எங்களாள் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Thilagabama opposes
அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்
மேலும் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். தனி நபர்களை விட தலைமை பெரியது. தலைமையை விட இயக்கம் பெரியது. இயக்கத்தை விட சமூகம் பெரியது என திலகபாமா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இது தான் காரணம் .? வெளியான பரபரப்பு தகவல்
PMK Protest
ராமதாஸ் இல்லம் அருகே போராட்டம்
இதனிடையே பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்க மாட்டோம் மீண்டும் அன்புமணியையே பாமக தலைவராக நியமிக்க வேண்டும் என கோரி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.