- Home
- Tamil Nadu News
- அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி! தூக்கியடிக்கப்பட்ட SP!அடுத்தடுத்து வெளியாகும் புதிய தகவல்!
அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி! தூக்கியடிக்கப்பட்ட SP!அடுத்தடுத்து வெளியாகும் புதிய தகவல்!
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பாக போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில் 18 காயங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாப் அப் மரணம்
தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது அஜித்குமார் என்ற இளைஞரின் லாப் அப் மரணம் விவகாரம் தான். நொடிக்கு நொடி அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் அஜித் குமார்(28). நகை திருட்டு விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருண்குமார் உயிரிழந்தார்.
கைதான 5 போலீசாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
அவரை போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் உயிரிழந்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் 6 போலீசாரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று இரவு வெளியானது. அதில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இந்த சூழலில் திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் அஜித்தை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்மால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அஜித் குமாரின் வாயில் மிளகாய் பொடி
அதேபோல் அஜித் குமாரோடு விசாரணையில் இருந்த வினோத் என்பவரும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். போலீசார் மிளகாய் பொடியை அஜித் குமாரின் வாயில் 4,5 முறை கொட்டி அடித்தார்கள். அவன் கேட்க தண்ணீரையும் கொடுக்கல, அதனால கடைசியில் அவனுக்கு வலிப்பு வர்ற மாதிரி வந்துச்சு. உடனே கம்பி ராடை கையில் கொடுத்தாங்க. ஆனால், வலிப்பு நிற்கல அப்போது யூரின் எல்லாம் உடனே ரத்தமாக போயிருச்சு என தெரிவித்துள்ளார்.