- Home
- Tamil Nadu News
- காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!
காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!
''மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்! ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்?'' என்று அதிமுக கூறியுள்ளது.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் நகர பேருந்தில் இலவச பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். திமுகவை பார்த்து அதிமுக அப்படியே காப்பியடித்துள்ளதாக அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
காப்பி அடிக்கிறாங்க மிஸ்
இந்த நிலையில், திமுக அமைச்சர்களின் கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது "காப்பி அடிக்கிறாங்க மிஸ்" என்று அஇஅதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
எது ஒரிஜினல்? எது காப்பி?
எது ஒரிஜினல்? எது காப்பி? அம்மா மருந்தகம் ஒரிஜினல்- முதல்வர் மருந்தகம் காப்பி! அம்மா மினி கிளினிக் ஒரிஜினல்- மக்களைத் தேடி மருத்துவம் காப்பி! தாலிக்கு தங்கம் ஒரிஜினல்- அதை உல்டா செய்தது தானே புதுமைப் பெண் திட்டம்? இப்படி அடுக்கிக் கொண்டே போனால், திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் Cheap Copy தான்!
மக்கள் நலத் திட்டங்களுக்கு சொந்தக்காரங்க நாங்க தான்
மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG சொந்தக்காரங்க நாங்க தான்! ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்? மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அஇஅதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாக தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1500/- என அறிவித்தோம்!
பெண்கள் மறந்துவிடுவார்களா?
எடப்பாடி பழனிசாமி சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய "டூப்" முதல்வர் ஸ்டாலினின் அரசு, வேறென்ன செய்து கிழித்தது? திமுக அரசின் மாதம் ஆயிரம் ரூபாயே, எடப்பாடி பழனிசாமியின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு, 28 மாதம் லேட்டா தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது? அதையும் இன்று வரை, சொன்னபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கிறதா? தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?
ஒட்டுண்ணி ரகுபதி
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால், ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி. வாய்ப்பு ஒன்று வந்தால், தான் கட்டியிருக்கும் வேட்டியை கழற்றி விட்டு, வேறொரு வேட்டிக்கு தாவி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொள்ளக் கூட தயங்காத இந்த ரகுபதி எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி பேசலாமா?
இன்னும் நல்லா கதறுங்க
இன்னொருவர் டி.ஆர்.பி. ராஜா. பாக்ஸ்கான் துணை கம்பெனி என்று சட்டமன்றத்திலேயே கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டியவர் தானே இவர்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தான்டா வளர்ச்சி..." என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுக-வினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெச்சல்! நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே... இன்னும் 2 மாசம் தான்'' என்று கூறப்பட்டுள்ளது.

