MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுக்கும்.! மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று- மீனவர்களுக்கு எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுக்கும்.! மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று- மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  கடலில் மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள்(28.11.2023 ) நாளைக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.   

2 Min read
Author : Ajmal Khan
Published : Nov 27 2023, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வங்க கடலில் உருவாகிறது புயல்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

26
Tamilnadu Rains

Tamilnadu Rains

தொடரும் கன மழை

மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 27.11.2023 முதல் 29.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 30.11.2023 முதல் 03.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

36
Heavy Rain

Heavy Rain

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 
 

46

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்க கடல் பகுதிகள்: 

28.11.2023: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்,  தென்கிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.11.2023: தென்கிழக்கு  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்  பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

56

சூறாவளிக்காற்று

30.11.2023: தென்கிழக்கு  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
 

66

90 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று

01.12.2023: தென்கிழக்கு  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.  ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

தொடரும் கன மழை... நிரம்பும் நிலையில் ஏரிகள்.! செம்பரம்பாக்கம், புழல் நீர்மட்டம் என்ன.?வெள்ள அபாய எச்சரிக்கையா?
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சூறாவளி
கனமழை
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழ்நாடு தனி கோட்டையாக நின்று இந்தியாவிற்காக சண்டைபோடுகிறது ! கமல்ஹாசன் அதிரடி பேச்சு!
Recommended image2
Now Playing
அன்புமணி குறித்து மனம் வெதும்பி பேசிய மருத்துவர் ராமதாஸ்.!
Recommended image3
Now Playing
மதுரை வந்திறங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்! உற்சாக வரவேற்பு | MK Stalin Madurai Visit
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved