Asianet News TamilAsianet News Tamil

தொடரும் கன மழை... நிரம்பும் நிலையில் ஏரிகள்.! செம்பரம்பாக்கம், புழல் நீர்மட்டம் என்ன.?வெள்ள அபாய எச்சரிக்கையா?

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக செம்பரம்பாக்கம் தனது முழு கொள்ளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Due to heavy rains, the water level of Chembarambakkam Lake has increased KAK
Author
First Published Nov 27, 2023, 10:51 AM IST | Last Updated Nov 27, 2023, 10:51 AM IST

தொடர்ந்து பெய்து வரும் மழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், பல இடங்களில் மழையானது கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவானது வேகமாக நிறைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் சென்னையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியின் நீர் இருப்பும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் அடையாறு கரையோர பகுதியில் வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு மழைக்காலங்களிலும் செம்பரம்பாக்கத்தில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை உள்ளது. 

Due to heavy rains, the water level of Chembarambakkam Lake has increased KAK

ஏரிகளின் நீர் இருப்பு என்ன.?

மேலும் 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கத்தில் அதிகளவு தண்ணீர் ஒரே நேரத்தில் திறந்ததால் சென்னையின் பெரும்பாண்மையான பகுதிகள் மூழ்கியது. இந்தநிலையில் தற்போது வடகிழக்கு மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில், சென்னை புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 21.20 அடியில் தற்போது 18.89 அடியாக நீர் இருப்பு உள்ளது.  நீர்வரத்தானது 281 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 189 கன அடியாகவும்  உள்ளது. சோழவரத்தைப் பொறுத்த வரைக்கும் 18.86 அடி உயரம் கொண்ட சோழவரத்தில் தற்பொழுது 16.05 அடியாக நீர் இருப்பு உள்ளது. அதே நேரத்தில் 174 கனடி நீர் வந்து கொண்டுள்ளது. அதில் 12 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

Due to heavy rains, the water level of Chembarambakkam Lake has increased KAK

செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு என்ன.?

செம்பரம்பாக்கம் ஏரியை பொறுத்தவரைக்கும் மொத்தம் கொள்ளளவான 24 அடியில் தற்பொழுது 22.19 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. 532 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், 162கன அடி நீ வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி அணையின் நீர்த்தேக்கத்தை பொறுத்தவரை 35 அடி உயரம் கொண்ட பூண்டி அணையில் தற்பொழுது 30 அடிக்கு தண்ணீர் உள்ளது.  எனவை வரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவை பொறுத்து ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என கூறப்படுள்ளது.

இதையும் படியுங்கள்

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios