- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் ஆர்.என்.ரவி விட்டுச் சென்ற சீக்ரெட் ஃபைல்..! ஸ்பை மாஸ்டரின் ஸ்பெஷல் அஜெண்டா..!
தமிழகத்தில் ஆர்.என்.ரவி விட்டுச் சென்ற சீக்ரெட் ஃபைல்..! ஸ்பை மாஸ்டரின் ஸ்பெஷல் அஜெண்டா..!
ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேறி இருக்கலாம்; ஆனால் அவர் கொடுத்துச் சென்ற அந்த 'சீக்ரெட் ஃபைல்' 2026 தேர்தல் வரை தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

ஸ்பை மாஸ்டரின் ஸ்பெஷல் அஜெண்டா
தமிழக அரசியலில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு புயலாகவே மையம் கொண்டிருந்த ஆர்.என்.ரவி, இப்போது மேற்கு வங்க ஆளுநராகப் பறந்துவிட்டார். தமிழகத்தில் அவரது தேவைகள் முடிந்துவிட்டன என்ற ஒற்றை வரியோடு அவர் விடைபெற்றாலும், அவர் விட்டுச் சென்றிருக்கும் 'சீக்ரெட் ஃபைல்' தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக். மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநராக இருந்த ஆர்.என்.ரவி, ஒரு சாதாரண ஆளுநராகத் தமிழகம் வரவில்லை.
'ஸ்பை மாஸ்டர்' என்று அழைக்கப்படும் இவருக்கு அமித் ஷா கொடுத்த அஜெண்டா மிகத் தெளிவானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரவி செய்த காரியங்கள் எதிலுமே நிர்வாகம் என்பதைத் தாண்டி அரசியலே அதிகம் இருந்தது. பல்கலைக்கழகங்களில் இந்துத்துவா சித்தாந்தங்களைப் புகுத்துவது முதல், சட்டமன்றத்தில் மாநில அரசுக்கே சவால் விடுவது வரை ரவி ஆடிய ஆட்டம் எவருமே எதிர்பார்க்காதது.
கவர்னர்களிலேயே ஸ்பெஷலான ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் ஆளுநராக தேவைகள் முடிந்ததாலும், மேற்கு வங்கத்தில் அவரது உளவுத்துறை பணிகள் தேவை என்பதற்காகவும் அந்த மாநிலத்திற்கு கவர்னராக மாற்றப்பட்டுள்ளார் ஆர்.என்.ரவி. இந்தியாவில் இருக்கிற கவர்னர்களிலேயே ஆர்.என்.ரவி ரொம்பவே ஸ்பெஷலான ஒருவர்.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு செயல்படுகிற மத்திய உளவுத்துறையோடு இயக்குனராக இருந்தவர் ரவி. இந்தியாவையே உளவு பார்த்து அரசுக்கு ரிப்போர்ட் கொடுக்கிற பொறுப்பில் இருந்தவரை தான் தமிழ்நாடு ஆளுநராக நியமித்து தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, திமுக அரசை மாற்றுவது என இரண்டு அஜெண்டாவோடு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கவர்னராக இருந்ததைவிட, தமிழ்நாடு அரசியல் சூழல், பாஜகவை வலுவாக எப்படி கட்டமைப்பது? திமுக அரசாங்கத்தை மாற்றுவதற்கான திட்டங்கள் என அவ்வப்போது அமித் ஷாவிடம் ரிப்போர்ட்டை கொடுக்க, அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு பாஜக செயல்பட்டதாக கூறுகிறார்கள்.
திமுக அரசுக்கு ஆட்டம் காட்டிய ஆர்.என்.ரவி
குறிப்பாக சென்னை ஐஐடி போன்ற உயர் கல்வி வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் ஈடுபட்டுள்ள ஆட்களை பொறுப்புகளில் அமர்த்துவது, அவர்கள் மூலமாக இந்துத்துவா கொள்கைகளை கடத்துவது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்வியாளர்களை தேசிய பாதைக்கு மாற்றுவது என கடந்த ஐந்து ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையிலும், வெளியிலும் நடத்தி இருக்கிறார் ரவி. ஒரு பக்கம் திமுக அரசு திட்டங்களுக்கு கடிவாளம் போடுவது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது, சட்டமன்றத்திலேயே மாநில அரசை எதிர்த்தது என இதுவரை எந்த கவர்னரும் தமிழ்நாட்டில் செய்யாததை செய்து காட்டினார் ரவி.
அதிரவைத்த அந்த ‘25’ லிஸ்ட்!
கடைசியாக 2026 தேர்தலில் பாஜகவில் 25 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு சாதகமான தொகுதிகள் எவை என தனது உளவுத்துறை தொடர்புகளையும் களஆய்வும் செய்த ஒரு லிஸ்ட்டை அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறாராம் ஆர்.என்.ரவி. அதன் அடிப்படையில் தான் அதிமுகவிடம், பாஜக தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆர்.என்.ரவியின் தமிழக பணிகளால் பிரமித்து போன உளவுத்துறை, மேற்கு வங்கத்தில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க ஆர்.என்.ரவி தான் சிறப்பானவர் என அவரை மேற்குவங்க ஆளுராக அனுப்பி உள்ளது என்கிறார்கள்.
தமிழகத்தில் பாடம்... வங்கத்தில் ஆட்டம்!
தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக ரவி காட்டிய வேகம் டெல்லிக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. அதே ஃபார்முலாவை இப்போது மம்தா பானர்ஜியின் மேற்கு வங்கத்தில் அமல்படுத்த ரவி அனுப்பப்பட்டுள்ளார். தமிழகத்தில் அவர் விதைத்த 'சீக்ரெட்' திட்டங்கள், வரும் தேர்தலில் தாமரையை மலரச் செய்யுமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
மொத்தத்தில், ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேறி இருக்கலாம்; ஆனால் அவர் கொடுத்துச் சென்ற அந்த 'சீக்ரெட் ஃபைல்' 2026 தேர்தல் வரை தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.
