- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் அதிமுக, பாஜகவுக்கு வெற்றி முகமா? புதிய கருத்துக் கணிப்பு என்ன கூறுகிறது?
தமிழகத்தில் அதிமுக, பாஜகவுக்கு வெற்றி முகமா? புதிய கருத்துக் கணிப்பு என்ன கூறுகிறது?
இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் எனவும், அதிமுகவும் பாஜகவும் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது எனவும் தெரியவந்துள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணி 343 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக, பாஜகவுக்கு வெற்றி முகமா? இந்தியா டுடே கருத்துக் கணிப்பு என்ன கூறுகிறது?
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக, இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் அரசியலில் எந்த வகையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தேர்தல் வந்தால் யாருக்கு வெற்றி வாய்ப்பு, பாஜக தனித்து ஆட்சி பிடிக்க வாய்ப்பா.? தமிழகத்தில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என பல கேள்விகள் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா டுடே சார்பில் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக வாக்கு சதவிகிதம், நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வாக்கு சதவிகிம் வெளியாகியுள்ளது.
மீண்டும் தமிழகத்தில் திமுக
அதன் படி தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் எனவும், தி.மு.க. கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த தேர்தலை விட தற்போது தி.மு.க. கூட்டணியின் வாக்கு சதவிகிதம், 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் என்றும் இந்தியா டுடே கணித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணி கடந்த தேர்தலில் 47 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில்,
உயர்ந்த பாஜக வாக்கு- சரிந்தது அதிமுக வாக்கு சதவிகிதம்
தற்போது தேர்தல் நடைபெற்றால் 5 சதவிகித வாக்குகள் அதிகரித்து 52 சதவீத வாக்குகளைக் கைப்பற்றலாம் என இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட அதிமுக 23 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் 3 சதவிகித வாக்குகளை இழந்து 20 % வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி 3 சதவீதம் அதிகரித்து 21% வாக்குகளைப் பெற்றிருக்கும் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தனித்து பாஜக வெற்றி
எனவே தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் அதிமுக, பாஜக ஒரு சீட்டைக்கூட பெற முடியாது என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவித்த பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 343 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.