- Home
- Tamil Nadu News
- School College Leave: ஜூலை 28ம் தேதி விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!
School College Leave: ஜூலை 28ம் தேதி விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இதனால் ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிபராசக்தி சித்தர் பீடம்
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஆடிப் பூரம் என்பது அம்மனுக்கு உகந்த மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆடிப் பூர விழாவை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆடிப் பூர விழா
இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சிநேகா வெளியிட்டுள்ள அறிக்கையில்: செங்கல்பட்டு மாவட்டம் வரும் 28ம் தேதி ஆடிபுரத்தை ஒட்டி மேல்மருவத்தூரில் நடைபெறும் ஆடிபுர விழாவை முன்னிட்டு ஜூலை 28 திங்கட்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது. அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு
ஆனால் இந்த விடுமுறையன்று மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.