SMART CART : ரேஷன் கார்டில் அப்டேட் செய்யணுமா.? மிஸ் பண்ணாதீங்க! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது மீண்டும் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 97,000 பேருக்கு வழங்கப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட மாற்றங்களுக்கான முகாம்களும் சென்னையில் விரைவில் நடைபெற உள்ளன.
ரேஷன் கார்டின் சிறப்பம்சம்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. தமிழகத்தில் ரேஷன் கார்டு அரசின் சலுகைகளை பெற கட்டாயமாகும். குறிப்பாக ரேஷன்கடைகளில் உணவுப்பொருட்களான அரிசி, சக்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை மானிய விலையில் வாங்குவதற்கு தேவைப்படுகிறது.
இதே போன்று இயற்கை பேரிடர் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படுகிற நிவராணத்தை பெற முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றொரு முக்கிய அம்சமாக கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவி தொகை பெறுவதிலும் குடும்ப அட்டை கட்டாயமாகும். குடும்ப அட்டை இருந்தால் மட்டுமே மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மானிய விலையில் உணவு பொருட்கள்
இது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும். எனவே இந்த ரேஷன் கார்டு பெற தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து காத்துள்ளனர். ரேஷன் அட்டையானது மக்களின் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளை, இளஞ்சிவப்பு, கோதுமை அட்டை, பச்சை மற்றும் நீல அட்டைகள் உள்ளது.
இதில் உணவு பொருட்கள் வழங்கப்படும் தன்மையானது மாறுபடுகிறது. ஒரு சில கார்டுகளில் எந்த பொருட்களும் இல்லாமல் அரசின் அடையாளத்திற்கு மட்டுமே வைத்திருக்கின்றனர். பச்சை அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. இளஞ்சிவப்பிலான இந்த பிங்க் அட்டை தாரர்களுக்கு அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக மானியம் கிடைக்கிறது.
காத்திருக்கும் 3 லட்சம் பேர்
இந்தநிலையில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு காரணமாக மகளிர் உதவித்தொகையில் பெறமுடியாமல் தவித்தனர். இதற்கு முக்கிய காரணமாக தமிழக அரசு நிதிச்சுமையில் தவித்து வரும் நிலையில் புதிதாக விண்ணப்பித்த குடும்ப அட்டை தாரர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இது மட்டுமில்லாமல் நாடாளுமன்ற தேர்தல் பணிகளும் தொடர்ந்து நடைபெற்ற காரணத்தால் புதிதாக ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து புதிய கார்டுகளுக்காக விண்ணப்பித்தவர்கள் நாள்தோறும் உணவுப்பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு அழைந்து வந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் முதல் கட்டமாக 97 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு விநியோக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 80ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ration shop
சிறப்பு முகாம் அறிவிப்பு
மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் சரியான தகவல் இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது ஸ்மார்ட் கார்டில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து சென்னையில் 19 மண்டலங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டில் திருத்தம்
இந்த மண்டலங்களில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
அங்கீகார சான்றிதழ் பெற வசதி
மேலும், இதுமடுட்மில்லாமல் நியாய விலைக் கடைகளில் உணவு பொருட்களை பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.