- Home
- Tamil Nadu News
- சமூக நலத்துறையில் 7,997 காலிப்பணியிடம்.! எப்போது நிரப்பப்படும்- தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
சமூக நலத்துறையில் 7,997 காலிப்பணியிடம்.! எப்போது நிரப்பப்படும்- தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக நலத்துறையின் கீழ் 7,997 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Social Welfare Department vacancies : தமிழகத்தில் வேலை இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கிட தனியார் துறைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் சொந்த தொழில் செய்ய விருப்புபவர்களுக்காகவும் பயிற்சி அளித்து கடன் உதவிக்கான வழிகாட்டவும் செய்யப்படுகிறது. மேலும் அரசு பணியை குறிக்கோளாக வைத்து இரவு பகலாக படித்து வரும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு வேலையும் வழங்கப்பட்டு வருகிறது.
Anganwadi worker recruitment
அங்கன்வாடி பணியிடங்கள்
மேலும் நேரடி நியமன முறையில் அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பபட்டு வருகிறது. அந்த வகையில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 7,783 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பதவிகளுக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்திருந்தது. இந்த 7,783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது.
Social welfare department jobs
சமூக நலத்துறை - 7997 காலிப்பணியிடம்
இந்த நிலையில் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, சட்டப்பேரவையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, தாம்பரம் தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், சமூக நலத்துறை சார்பாக 7 ஆயிரத்து 997 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்